LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Maasilaa Unmai Kaathalae

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
உங்களுக்கு அளவில்லா செல்வம் கிடைத்து விட்டது
இனி வாழ்த்துகளும் வரவேற்புகளும்
ஆமாம் சாமிகளும் வந்து குவியும்
உலகத்து அழகிகளும் செல்விகளும்
உங்களை அறிமுகம் செய்து கொள்ள காத்திருப்பார்கள்
இப்போது நீங்கள் என்னிடம் படிக்கும் காதல் காவியம்
அப்பொழுது ஏடு ஏடாக காற்றில் பறக்கும்

மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே

பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா
பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

நெஞ்சிலே நீங்கிடாத பொங்கும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

நெஞ்சிலே நீங்கிடாத பொங்கும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா
மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே

கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்

மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாறுமோ

WRITERS

A. MARUTHAKASI, S. DAKSHINAMOORTHY

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist