எழில் மதிவதனம் அழைக்கின்றதே
எழில் மதிவதனம் அழைக்கின்றதே
பார்த்தால் .......... சுகமே .........
கோசலை ராமன் நீ வைகுண்ட வாசன் நீ
கோபியர் கண்ணனாய் விளையாடினாய்
கோசலை ராமன் நீ வைகுண்ட வாசன் நீ
கோபியர் கண்ணனாய் விளையாடினாய்
திருமலை ஏறி வந்து கோவிந்தம் பாடி வந்து
ஆராதனை செய்தால் அருகிலே கோகுலம்
எழில் மதிவதனம் அழைக்கின்றதே
பார்த்தால் .......... சுகமே .........
அலைகளில் கலையான ஹரி கேசவா
திருமகள் நீ சொன்னால் குறையாவும் தீர்ப்பாளே
அலைகளில் கலையான ஹரி கேசவா
திருமகள் நீ சொன்னால் குறையாவும் தீர்ப்பாளே
எம் குறை கேட்டெழுந்து ராகவா நீ வந்து
பூவிழியால் நோக்க குறையெல்லாம் நீங்குமே
எழில் மதிவதனம் அழைக்கின்றதே
எழில் மதிவதனம் அழைக்கின்றதே
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED