எப்படி மனமுடித்தாய் பத்மாவதி
எப்படி மனமுடித்தாய் பத்மாவதி
எந்நேரமும் கோபியருடன் லீலைகள் புரிபவனை
எப்படி மனமுடித்தாய் பத்மாவதி
நல்லவனாய் நடித்தே நடமாடும் கள்வன் அவன்
வெண்ணெயைத் திருடியே அடம் செய்யும் வம்பன் அவன்
நல்லவனாய் நடித்தே நடமாடும் கள்வன் அவன்
வெண்ணெயைத் திருடியே அடம் செய்யும் வம்பன் அவன்
வெட்கமே இல்லாது சேலை திருடும் கயவன் அவன்
வட்டிக்காசில் வாழுகின்ற வெட்டியான ஆள் அவன்
வட்டிக்காசில் வாழுகின்ற வெட்டியான ஆள் அவன்
எப்படி மனமுடித்தாய் பத்மாவதி
எந்நேரமும் கோபியருடன் லீலைகள் புரிபவனை
எப்படி மனமுடித்தாய் பத்மாவதி
உருவத்தை மாற்றி மாற்றி ஒளிந்தே தான் வாழ்பவன்
ஓராயிரம் மின்னலாய் வேஷமே பூண்டவன்
உருவத்தை மாற்றி மாற்றி ஒளிந்தே தான் வாழ்பவன்
ஓராயிரம் மின்னலாய் வேஷமே பூண்டவன்
பாரதப் போரினையே மூட்டி வைத்த கலகன் அவன்
பாம்பின் தலை மீதிலே கூத்தாடும் கேவலன்
பாம்பின் தலை மீதிலே கூத்தாடும் கேவலன்
எப்படி மனமுடித்தாய் பத்மாவதி
எந்நேரமும் கோபியருடன் லீலைகள் புரிபவனை
எப்படி மனமுடித்தாய் பத்மாவதி
வயிற்றினில் உலகினையே அடக்கிய திருடன் தான்
கயிற்றினில் கட்டியும் அடங்காத முரடன் தான்
வயிற்றினில் உலகினையே அடக்கிய திருடன் தான்
கயிற்றினில் கட்டியும் அடங்காத முரடன் தான்
மாமனாம் கம்சனை கொன்ற கொலைகாரனே
மாதவன் என்ற பேரில் மாயைகள் செய்பவன்
மாதவன் என்ற பேரில் மாயைகள் செய்பவன்
எப்படி மனமுடித்தாய் பத்மாவதி
எந்நேரமும் கோபியருடன் லீலைகள் புரிபவனை
எப்படி மனமுடித்தாய் பத்மாவதி
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED