LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Paadhai Ethuvarai

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆஹா ஹா
ஆஹா ஹஹா
ஆஹா ஹா ஹ ஹா ஹஹஹா
பாதை எதுவரை போகும் என்று பார்வை அறிவதில்லை
பார்வை எதுவரை போனதென்று பாதை அறிந்ததில்லை
மனவாசல் தீபம் ஒன்று வரும் கனவினிலே
திருக்கோவில் தெய்வம் நிற்கும் நடுத்தெருவினிலே
நட்சத்திரச் சன்னல்களை திறந்து பார்க்கும் நாளிலே
பாதை எதுவரை போகும் என்று பார்வை அறிவதில்லை
பார்வை எதுவரை போனதென்று பாதை அறிந்ததில்லை
கண்ணால் ஒரு கோட்டைக்கட்டி காதல் கொடியினை ஏற்றினாய்
நாவும் கொடி யாவும் உந்தன் தாயின் மணிக் கொடியாகுமா
இளம் பருவத்தின் காதல் காற்று இசை அமைக்கிறதோ
இதயம் எழுதிப் பாடும் பாட்டை முண முணுக்கிறதோ
கற்பனையும் கனவுகளும் வாழ்வினில் நிஜமோ
பாதை எதுவரை போகும் என்று பார்வை அறிவதில்லை
பார்வை எதுவரை போனதென்று பாதை அறிந்ததில்லை
நெஞ்சில் ஒரு பொன் வீணையால் கொஞ்சும் குழந்தையை மீட்டினாள்
தாய்ப்பாலினை கண்ணீருடன் தங்க மகனுக்கு ஊட்டினாள்
அன்னை என்ன வரம் வாங்கி வந்தாள் இன்னும் உழைத்திடவோ
கண்ணின் மடியே உன்னை வளர்த்த கதை உரைத்திடவோ
மண்ணில் நீ பிறந்ததனால் கண்ட பலன் எதுவோ
பாதை எதுவரை போகும் என்று பார்வை அறிவதில்லை
பார்வை எதுவரை போனதென்று பாதை அறிந்ததில்லை
மனவாசல் தீபம் ஒன்று வரும் கனவினிலே
திருக்கோவில் தெய்வம் நிற்கும் நடுத்தெருவினிலே
நட்சத்திரச் சன்னல்களை திறந்து பார்க்கும் நாளிலே
பாதை எதுவரை போகும் என்று பார்வை அறிவதில்லை
பார்வை எதுவரை போனதென்று பாதை அறிந்ததில்லை

WRITERS

UDHAYAN, MU METHA

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other