என் உயிரே நீயே என்னையுறுக்குகிறாயே
உன்னிடமே நானே என்னை உணர்ந்திடுவேனே
நீரின்றியே மீனா முழு நிலவின்றியே வானா
நீ இன்றியே நானா இந்த மண்ணில் வாழ்ந்திடுவேனா
நெஞ்சின் தாகம் நேரில் தெரிகிறதே
இமைகளை மீறி கண்ணீர் வருகிறதே
நான் உன் நிலவே நான் உன் மலரே
ஒவ்வொரு நொடியும் உன் முகம் தெரியும்
என் மனமெல்லாம் நடனங்கள் புரியும்
வேரும் நீரும் பிரிந்திடக் கூடாது
பிரிந்தால் வேறில் உயிரும் கிடையாது
கரையில் மீனாய் என் உயிர் துடித்ததடி
நீராய் வந்தாய் என் உயிர் இனிதானதடி
உன்னையே உயிரென நினைக்கிறேன்
கண்ணுக்கு இமை என இருக்கிறேன்
வா வா நிலவே நான் உன் மலரே
காதல் சிலையாய் கல்லாய் இருந்தேன்
நிறைவேறும் ஒளியாய் உயிர் பெற எழுந்தேன்
வீசும் காற்றும் சுவாசம் தந்திடுமே
நீ என் சுவாசம் என்றே நிலைத்திடுமே
நானும் நீயும் என்றும் இணைந்திருப்போம்
கடலில் சேரும் நதி என கலந்திருப்போம்
நான் உன் நிலவே நான் உன் மலரே
என் உயிரேநீயே என்னையுறுக்குகிறாயே
உன்னிடமே நானேஎன்னை உணர்ந்திடுவேனே
நீரின்றியே மீனா முழு நிலவின்றியே வானா
நீ இன்றி ஏன் நானா இந்த மண்ணில் வாழ்ந்திடுவேனா
நெஞ்சின் தாகம் நேரில் தெரிகிறதே
இமைகளை மீறி கண்ணீர் வருகிறதே
வா வா நிலவே வா என் மலரே என் உயிரே
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED