LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Enthan Karpanai

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
எந்தன் கற்பனைத் தேரில்
உள்ள கற்பூரப் பூவே
சுவை கற்பகச் சாறாய்
நீ தித்திப்பதென்ன
எந்தன் கற்பனைத் தேரில்
உள்ள கற்பூரப் பூவே
சுவை கற்பகச் சாறாய்
நீ தித்திப்பதென்ன
இனிக்கின்ற காமதேனு பாலைக்
கொட்டிக் குளிக்கின்றதாலே
சுவைக்கின்ற தேவ அமுதினை
மட்டும் குடிக்கின்றதாலே
இனிக்கின்ற காமதேனு பாலைக்
கொட்டிக் குளிக்கின்றதாலே
சுவைக்கின்ற தேவ அமுதினை
மட்டும் குடிக்கின்றதாலே
காமதேவனின் பாணம்
உந்தன் பூவிழியாகும்
சொர்க்க லோகங்கள் யாவும்
உந்தன் மேனிக்குள் ஆடும்
எந்தன் கற்பனைக் கோயில்
கொண்ட பொற்சிலை நீயே
பல அற்புதப் பாடம்
நீ கற்பிப்பதென்ன
தங்கம் மின்னும் மேனி
இன்பம் என்னும் மேடை
அங்கு வந்து நான் ஆடவோ
தங்கம் மின்னும் மேனி
இன்பம் என்னும் மேடை
அங்கு வந்து நான் ஆடவோ
யௌவனத்தின் வீடு
நெஞ்சில் இரு கூடு
யௌவனத்தின் வீடு
நெஞ்சில் இரு கூடு
மோகத்தைத் தாலாட்டவோ
மேளம் கொட்டி விடுங்கள்
தாலி கட்டி விடுங்கள்
காதல் கட்டிடுங்கள்
ஆணும் தொட்டில் விடுங்கள்
எந்தன் கற்பனைத் தேரில்
உள்ள கற்பூரப் பூவே
சுவை கற்பகச் சாறாய்
நீ தித்திப்பதென்ன
அந்தரத்தை ஆளும்
இந்திரனின் கோளம்
உங்களுக்கு யார் தந்ததோ ஓ ஓ
அந்தரத்தை ஆளும்
இந்திரனின் கோளம்
உங்களுக்கு யார் தந்ததோ ஓ ஓ
அங்கம் மூடும் ஆடை
தன்னை மீறும் பார்வை
அங்கம் மூடும் ஆடை
தன்னை மீறும் பார்வை
கண்களுக்கு ஏன் வந்ததோ
கனி முற்றும் இருந்தும்
சுளை மட்டும் அருந்தும்
கலையாகும் அறிந்த
ஒரு மேதையடி நான்
எந்தன் கற்பனைக் கோயில்
கொண்ட பொற்சிலை நீயே
பல அற்புதப் பாடம்
நீ கற்பிப்பதென்ன
எந்தன் கற்பனைத் தேரில்
உள்ள கற்பூரப் பூவே
சுவை கற்பகச் சாறாய்
நீ தித்திப்பதென்ன

WRITERS

Nethaji

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other