LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ayya Thorai

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
அய்யாதுரை அய்யாதுரை
நீ பல்லாண்டு வாழ்க அய்யாதுரை
ம்ம்ம்ம்ம்
கண்ணத்தொர கண்ணத்தொர
உன் பார்வை பட்டு பூத்திர

கோவில் குளம் கண்டதில்லை
இப்படி ஓர் சாமி
புண்ணியம் தான் செஞ்சிருக்கு
தென்காசி பூமி
கோவில் குளம் கண்டதில்லை
இப்படி ஓர் சாமி
புண்ணியம் தான் செஞ்சிருக்கு
தென்காசி பூமி

வானம் தேஞ்சு
போச்சு பூமி காஞ்சு
போச்சு ஏழை எங்கள ஏமாத்தி
கிழக்கு இருட்டி போச்சு
மேக்க மறைஞ்சு போச்சு
காலம் எங்கள ஏமாத்தி

மண்ணோடு மக்களையும் தத்தெடுத்த ராசா
இன்னொருக்க எங்களைத்தான் பெத்தெடுத்த ராசா

அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை
அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை

ஊருக்குள்ள ஆறு வந்து
ஏறு பூட்டதான் சொல்லுதய்யா
தேருக்குள்ள சாமி வந்து
காப்பு கட்டத்தான் கேக்குதய்யா

நெல்ல வெதைச்சு பார்த்தா
இப்போ சோறு விளையுது ஆத்தா
புல்ல வெதைச்சு பார்த்தா
இப்போ எள்ளு விளையுது ஆத்தா

கண்ணுக்கெட்டும் தூரம் பஞ்சம் ஏதும் இல்ல
நெஞ்சுக்கெட்டும் தூரம் துன்பம் ஏதும் இல்ல

அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை
அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை

பாறை கல்லும் பாதம் பட்டு
பச்ச நீளம் ஆனதே
பட்டினியும் தூரமாக ஓடி போனதே
தூர பட்டு பட்ட போல
எங்கள் நெஞ்சு ஆனதே
தொண்டை குழி தாகம் தீர்ந்து ஈரம் ஆனதே

அஹ்ஹ்ஹ பூமியிலும் களவு வரும்
உங்கள் நட்புல பழுதில்லையே
பசும் பாலும் கர வடியும்
உங்க உறவில குறை இல்லையே

வெள்ள வேட்டி கட்ட
நல்ல வெள்ள உள்ளம் வேணும்
உங்க முகத்த கண்டா
எங்க தாய போல தோணும்

நல்லதையும் செய்ய கைய நீட்டும் சாமி
உள்ளதையே சொல்ல வாய் திறக்கும் சாமி

அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை
அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை

அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை
அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை

WRITERS

Bharadwaj, Snehan

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist