மச்சான் உங்க மீசை மேல ஆசை இருக்குது
உன்னக் கண்டு சின்னப் பொண்ணு பேசத் துடிக்கிது
மச்சான் உங்க மீசை மேல ஆசை இருக்குது
உன்னக் கண்டு சின்னப் பொண்ணு பேசத் துடிக்கிது
என் நெத்தி வகுடுல முத்தம் தந்த நெனப்பு இருக்குது
அத நெஞ்சுக்குழியில நெனச்சு நெனச்சு ஆசை துடிக்குது
கண்மூடி கனவுல உன்னோடு பேசுறேன்
தாளத்தில் சேரல ஏதோ நா பாடுறேன்
மச்சான் உங்க மீசை மேல ஆசை இருக்குது
உன்னக் கண்டு சின்னப் பொண்ணு பேசத் துடிக்கிது
மச்சான் உங்க மீசை மேல ஆசை இருக்குது
உன்னக் கண்டு சின்னப் பொண்ணு பேசத் துடிக்கிது
ஒரு நூலு சேலை நீ வாங்கி தந்த
அத கூற சேலை போல நெனச்சேனையா
ஒரு ஒத்த முழம் பூ வாங்கி தந்த
அத தோளில் மாலை போல சுமந்தேனையா
அந்த உச்சி மலை காத்தருவி கேக்குதையா
நீ எப்போ வந்து என்ன சேர பாக்குதையா
அந்த கம்மாக்கரை காத்து கூட கேக்குதையா
நம்ம கல்யாணத்த பாக்கத்தானே ஏங்குதையா
கூதக் குளிரு தேகம் முழுக்கும் கூசுதையா
மணமாலை மாத்த காலம் தேதி பாத்து வாயா
மச்சான் உங்க மீசை மேல ஆசை இருக்குது
உன்னக் கண்டு சின்னப் பொண்ணு பேசத் துடிக்கிது
மச்சான் உங்க மீசை மேல ஆசை இருக்குது
உன்னக் கண்டு சின்னப் பொண்ணு பேசத் துடிக்கிது
ஒரு பாலும் தேனா நாம சேர்ந்திருக்க
பகல் கனவு கண்டால் என்ன பலிக்காதையா
உன் வேர்வை வாசம் எனக்கு மணமா வீசும்
உன்ன குழந்தை போல மார்பில் சுமப்பேனையா
வான் நட்சத்திரம் அத்தனையும் பாக்குதையா
நீ வம்பிழுக்க வெக்கப்பட்டேன் நானும்தாயா
ஒரு அந்தி மல்லி பூவு போல பூத்திருக்கேன்
என் ஆசை எல்லாம் தேக்கி வச்சு காத்திருக்கேன்
என் ஏக்கம் உந்தன் காதில் இன்னும் கேக்கலையா
நீ எதற்காக இன்னும் தள்ளி நிக்கிறியா
மச்சான் உங்க மீசை மேல ஆசை இருக்குது
உன்னக் கண்டு சின்னப் பொண்ணு பேசத் துடிக்கிது
மச்சான் உங்க மீசை மேல ஆசை இருக்குது
உன்னக் கண்டு சின்னப் பொண்ணு பேசத் துடிக்கிது
என் நெத்தி வகுடுல முத்தம் தந்த நெனப்பு இருக்குது
என் நெஞ்சுக்குழியில உன்ன நெனச்சு ஆசை துடிக்குது
கண்மூடி கனவுல உன்னோடு பெசுறேன்
தாளத்தில் சேரல ஏதோ நா பாடுறேன்
மச்சான் உங்க மீசை மேல ஆசை இருக்குது
உன்னக் கண்டு சின்னப் பொண்ணு பேசத் துடிக்கிது
மச்சான் உங்க மீசை மேல ஆசை இருக்குது
உன்னக் கண்டு சின்னப் பொண்ணு பேசத் துடிக்கிது