மாமனே மாமனே உன் நெனப்பு வாட்டுது
ராவிலும் பகலிலும் கண்ணு மூட மறுக்குது
மாமனே மாமனே உன் நெனப்பு வாட்டுது
ராவிலும் பகலிலும் கண்ணு மூட மறுக்குது
என்னவிட்டு போவாத மாமனே.. நீ
என்னவிட்டு போவாத மாமனே.. நீ
வாரேனே வாரனே உன் மாமன் நானடி
ராவிலும் பகலிலும் உன் கனவு தானடி
வாரேனே வாரனே உன் மாமன் நானடி
ராவிலும் பகலிலும் உன் கனவு தானடி
என்னவிட்டு போகாத ஜீவனே.. நீ
இல்லாத இதயம் எனக்கும் பாரமே..
என்னவிட்டு போகாத ஜீவனே.. நீ
இல்லாத இதயம் எனக்கும் பாரமே..
மாமனே மாமனே உன் நெனப்பு வாட்டுது
ராவிலும் பகலிலும் கண்ணு மூட மறுக்குது
சந்திரனும் சூரியனும் நம்மை வந்து வாழ்த்துமடி
வாடி புள்ள ஒன்னா சேந்து வாழலாம்
நம்முடைய தலையெழுத்த ஒன்றிணைத்த இறைவனுக்கு
ஒத்துமையா மாவிளக்கு போடலாம்
உள்ளத்தில உன்னவிட்டா யாரும் இங்கு இல்லையடி
உன்னுடைய சொந்தத்துக்கு சொல்லி கொஞ்சம் விளக்குடி
உள்ளத்தில உன்னவிட்டா யாரும் இங்கு இல்லையையா
உன்னுடைய சொந்தத்துக்கு சொல்லி கொஞ்சம் விளக்குயா
விதி தானே.. உன்ன என்ன சேர்த்தது
விலகாதே.. நிலவும் துடிக்குது
மாமனே மாமனே உன் நெனப்பு வாட்டுது
ராவிலும் பகலிலும் கண்ணு மூட மறுக்குது
சரிகை வேட்டிகட்டி சாமி நீங்க நடந்துவந்தா
சந்தனத்து வாசம் வரும் ஜனங்க எழுந்து வணக்கம் சொல்லும்
உன்னோடு சேர்ந்திடத்தான் நெடுநாளா காத்திருந்தேன்
என்னோட மனசுக்குள்ள ஏதேதோ நெனச்சுருக்கேன்
உள்ளத்தில உன்னவிட்டா சத்தியமா யாரும் இல்ல
சொந்தத்துக்கு சொல்லிவிடு பெத்துதாரேன் பத்து புள்ள
உள்ளத்தில உன்னவிட்டா சத்தியமா யாரும் இல்ல
சொந்தத்துக்கு சொல்லிப்புட்டேன் பெத்துதாடி பத்து புள்ள
குலசாமி.. உன்னை என்னை சேர்த்தது
கெட்டிமேளம்.. தாலி செய்ய சொல்லிவிடு
வாரேனே வாரனே உன் மாமன் நானடி
ராவிலும் பகலிலும் உன் கனவு தானடி
மண்ண நம்பி மரம் இருக்கு உன்ன நம்பி உசுர் இருக்கு
கட்டி என்ன ஆள வாங்க ராசனே
கண்ணகி நீ நடந்து வந்தா கட்டாந்தரை பூக்குமடி
காதல் என்னும் மாலை கோர்பேன் நானடி
உள்ளதெல்லாம் அத்தனையும் உன்னிடத்தில் சொல்லிப்புட்டேன்
உன் பதில சொல்லிவிடு எப்பவும் நா காத்திருக்கேன்
உள்ளதெல்லாம் அத்தனையும் உன்னிடத்தில் சொல்லிப்புட்டேன்
உன் பதில சொல்லிடடி எப்பவும் நா காத்திருக்கேன்
நிலையான.. நம்முடைய வாழ்விலே
நிஜம் தானே.. நம்முடைய காதலே
வாரேனே வாரனே உன் மாமன் நானடி
ராவிலும் பகலிலும் உன் கனவு தானடி
வாரேனே வாரனே உன் மாமன் நானடி
ராவிலும் பகலிலும் உன் கனவு தானடி
என்னவிட்டு போகாத ஜீவனே.. நீ
இல்லாத இதயம் எனக்கும் பாரமே..
என்னவிட்டு போகாத ஜீவனே.. நீ
இல்லாத இதயம் எனக்கும் பாரமே..
மாமனே மாமனே உன் நெனப்பு வாட்டுது
ராவிலும் பகலிலும் கண்ணு மூட மறுக்குது
மாமனே மாமனே உன் நெனப்பு வாட்டுது
ராவிலும் பகலிலும் கண்ணு மூட மறுக்குது
என்னவிட்டு போவாத மாமனே.. நீ
என்னவிட்டு போவாத மாமனே.. நீ
மாமனே மாமனே உன் நௌப்பு வாட்டுது
ராவிலும் பகலிலும் கண்ணு மூட மறுக்குது