LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Penne Penne

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
பெண்ணே பெண்ணே-இந்த
வாழ்க்கை ஒரு முறைதானே
வாழும் வாழ்க்கை-இங்கு
தினமும் கொடுமையில்தானே-(2)

பெண்களின் விழிகள்
அழுவதற்கா?
செல்கின்ற வழிகள்
விழுவதற்கா?

அழுதது யாரால்?
விழுந்தது எதனால்?
அறிவாயோ..?
*
பெண்கள்-நாட்டின்
கண்கள் என்பாரே-அந்தக்
கண்கள் இரண்டையும்
பறித்துக் கொள்வாரே

குழந்தையும் தெய்வமும்
ஒன்றே என்பார்-அந்த
தெய்வத்தைக் கூட
தவறாய்க் காண்பார்

பெண்-
மென்மையானவள் என்பாரே
வன்-
கொடுமையும் புரிவாரே

பெண்-
அழகு தேவதை என்பாரே
அந்த-
அழகினில் அமிலமும் எறிவாரே

பெண்களின் விழிகள்
அழுவதற்கா?
செல்கின்ற வழிகள்
விழுவதற்கா?

அழுதது யாரால்?
விழுந்தது எதனால்?
அறிவாயோ..?
*
பெண்ணே பெண்ணே-இந்த
வாழ்க்கை ஒரு முறைதானே
வாழும் வாழ்க்கை-இங்கு
தினமும் கொடுமையில்தானே-(2)
*

WRITERS

C. Sathya, Thozhan

PUBLISHERS

Lyrics © Royalty Network, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist