நித்தம் உன்னை மட்டும் நினைவிலே தைத்திருந்தேன்
சத்தம் இன்றி உந்தன் பின்னே ஒரு நிழலாய் வந்தேன்
இந்த உடல் என் இசை உயிர் உள்ளவரை
ஆள என்று என்றும் நினைக்காதே
சித்தம் உந்தன் காலில் அடிமை மறுக்காதே
விட்டு விலகிடு என்று மட்டும் நீ சொன்னால்
பாரு என் உயிரும் இங்கே கவியாகி கதறுதடி
பாரு என் கண்கள் வழியே உயிரே கசியுதடி
காந்தக் கண்ணில் காந்தகம் வேண்டாம்
கூந்தல் கட்டி இழுத்திட வேண்டாம்
காதல் மொழி பேசு வாதம் எதற்கு
உன் கால்களை பாரு சிணுங்கும் கொலுசு
காலங்கள் மாறும் உன் மதி நிலை உணரும்
கோபங்கள் சாகும் வெண் மதி ஒளி படரும்
மௌனங்கள் போதும் கலக்கங்கள் விலகும்
வண்ணங்கள் சேர்ந்திட உன் எண்ணங்கள் மாறுமோ
புரிகிறதா புரிய மறுக்கிறதா
விடுகதை விடை இன்றி விலகி சென்றாய்
என் உயிரின் நிலை என்னில் என்ன பிழை
பல தடை நதி மடை பாய்ந்தும் விலகவில்லை
அருகே வந்து அணைத்து செல்வேன் நீ தூரம் இல்லை
கோபம் கொண்டு சாபம் தந்த பாவம் உணரவில்லையா