யாகி யாகி யாராகி யாகி யாகி யாகி
யாராகி யாராகி யாராகி யாராகி ஹே
தையாரே தையாரே ஹே யாகி யாகி யாகி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்
அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்
அண்ணாச்சி கடையிலதான் எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்
பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
வெயிலத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
வெண்ணிலவ வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
பொன் வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்
காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம்
ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டுனோம்
கல்யாணம்தான் கட்டிக்குவோம்
கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்
எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்
தொப்புள்கொடியைப் போலத்தான்
வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
WRITERS
V.V. Prassanna, Jessie Gift, Tippu, Kailash Kher