LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kanavai Vilangum

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
நீங்கா நினைவுகளை மனதில்
நான் வைத்திருப்பேன்
காலம் மறைந்தாலும்
இதை நான் என்னில் தைத்திருப்பேன்
வாழ்க்கை துவங்கி கையில் ஒன்றும் இல்லாமல்
கண்கள் கலங்கின நினைவுள்ளதே
நினைப்போர் அணைப்போர் என்ற யாரும் இல்லாமல்
ஈரம் கசிந்தேன் நினைவுள்ளதே
மடியில் விழுந்தேன் அழுது துடித்தேன்
கதறி வாழ்க்கை போதும் என்றேன்
எத்தனை முறை என் கண்கள் துடைத்தேன்
இதுவா வாழ்க்கை போதும் என்றேன்
உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்
மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்
மனதாய் வாழ்க்கையில் உறவு கொண்டீர்
இதுவே போதும் என்பேன்

கடினம் தோன்றும் சில நிமிடங்களில்
உம்மை இகழ்ந்து பகைத்து பிரிந்திருந்தேன்
நிலைகள் தடுமாறும் நொடிப்பொழுதில்
உம்மை ஐயோ ஐயோ நோகடித்தேன்
மனம்விட்டு மனம்விட்டு பேச வைத்தீரே
நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே
மனம்விட்டு இயேசு என்று பேச வைத்தீரே
நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே
என் வாழ்வினில் இது மட்டுமா
கனவாய் விளங்கும் ஏகம் அனைத்தும்
நினைவாகும் ஓர்நாள் வருமே
அந்நாள் எனக்காய் நீர் தரும் அனைத்தும்
உலகம் கண்டு வியந்திடுமே
உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்
மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்
மனதாய் வாழ்க்கையில் உறவு கொண்டீர்
இதுவே போதும் என்பேன்

WRITERS

Giftson Durai

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid, THELASTEPISTLESRECORDS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Sadness

Sentiment
Thumbsup IconThumbsdown Icon
Theme

None