அட ஆறு காலங்களும் மாறி மாறி வரும்
அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை
மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன
அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன
சூடரி… சூடரி… உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே
இதுவும் கடந்து போகும்(ஓஓ..ஓஓ)
அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்
அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்
வானும் மண்ணும் வாழும் ஆறுதல்
பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்
மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன
அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன
சூடரி… சூடரி… உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே
இதுவும் கடந்து போகும்(ஓஓ..ஓஓ)
இதுவும் கடந்து போகும் (ஆஆ...ஆஆ...ஆஆ)
அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே
மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே
வாசம்தான் பூவின் பார்வைகள்
காற்றில் ஏறி காணும் காட்சிகள்
காணாமல் வெளியாக பார்த்திடுமே
சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே
பெரும் காற்றாக மாறிச்சென்று உறவாடுமே
சூடரி… சூடரி… வெளிச்சம் தீராதே
அதை நீ உணர்ந்தால் பயணம் தீராதே
மலரின் நினைவில் மணம் வாடாதே
இதுவும் கடந்து போகும் (ஓஓ..ஓஓ)
இதுவும் கடந்து போகும்(ஆஆ...ஆஆ)
இதுவும் கடந்து போகும்(ஓஓ..ஓஓ)
இதுவும் கடந்து போகும்(ஓஓ..ஓஓ)