LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ilavenirkala

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
இளவேனிற் கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி

இளவேனிற் கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி

சித்திர வானம்
சித்திரம் தீட்டிடும் மேகம்
ஒரு பத்தரை மாத்து தங்க நிலாவை சந்தித்தேன்
எங்கள் பார்வை நின்று போனது வானம் பூமி என்ன ஆனது

லாலா லாலலாலா

இளவேனிற் கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி

தூக்கம் போனது அவளை நினைத்தே ஏக்கமானது
பித்தனை போலானேன்
பார்க்குமிடமெல்லாம் அவளை போலே பாவை தெரிந்தது
பைத்தியமாய் ஆனேன்

என்னை போலே அவளும் இருந்தால் என்று
அவள் சொல்ல கேட்டு உள்ளம் எங்கோ போனது
மீண்டும் மீண்டும் அவள்தான் வேண்டும் என்று
எனை தூண்டும் உள்ளம் பச்சை கொடி காட்டுது

இது இன்று வந்த சொந்தமா இல்லை ஜென்ம ஜென்ம பந்தமா

இளவேனிற் கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி

சித்திர வானம்
சித்திரம் தீட்டிடும் மேகம்
ஒரு பத்தரை மாத்து தங்க நிலவை சந்தித்தேன்
எங்கள் பார்வை நின்று போனது வானம் பூமி என்ன ஆனது

இளவேனிற் கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

மஞ்சள் குங்குமம் கொண்ட தேவதை எந்தன் கையிலே
மங்கல நாண் கொண்டாள்
திங்கள் ஆடிடும் வானம் போலவே
எங்கள் வீட்டிலே மழலைகள் தான் தந்தாள்

பாட வைத்து
உள்ளம் ஆடவைத்து
அன்பு பாட்டு சொல்லி வீட்டில் இன்பம் தந்தவள்
தேட வைத்து
நெஞ்சம் வாட வைத்து
என்னை சோக தீயில் வேக வைத்து போனவள்

இந்த ஏழை என்னை மணந்தாள் எந்தன் ஜீவனுக்குள் கலந்தாள்

இளவேனிற் கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி

சித்திர வானம்
சித்திரம் தீட்டிடும் மேகம்
ஒரு பத்தரை மாத்து தங்க நிலவை சந்தித்தேன்
எங்கள் பார்வை நின்று போனது வானம் பூமி என்ன ஆனது

லாலா லாலலாலா

இளவேனிற் கால பஞ்சமி
லாலா லாலலாலா
அவள் வானில் வந்த பௌர்ணமி
லாலா லாலலாலா

WRITERS

K MADHIYALAGAN

PUBLISHERS

Lyrics © Universal Music Publishing Group

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist