LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Sirage Illatha Poonkuruvi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
சிறகே இல்லாத பூங்குருவி ஒன்று வானத்தில் தவிக்கிறது
துடுப்பே இல்லாத படகு ஒன்றை இன்று ஆழ் கடல் குடிகிறது
உதய காலமே இரவு ஆனதே யார் செய்த பாவமடி
விழுது இன்றுதான் வேரைத் தின்றதே யார் தந்த சாபமடி
சிறகே இல்லாத பூங்குருவிஒன்று வானத்தில் தவிக்கிறது
துடுப்பே இல்லாத படகு ஒன்றை இன்று ஆழ் கடல் குடிகிறது

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

வாசல் இல்லாத வீட்டிலே கோலம் நீ போட்டது
பூக்கள் இல்லாத சோலையில் வாசம் நீ கேட்டது
இந்த சோகம் யார் கொடுத்த சாபம் தொடரும்
இந்த துயரத்தின் முடிவேதம்மா
நடு இரவில் வெயில் அடிக்க மனதில் புயலடிக்க
வேறென்ன விதிதானம்மா
கட்டிய தாலிக்கோ ஆயுளில் குறையடி
கனவுகள் அறுந்ததடி
புகுந்த வீட்டுக்கோ புத்தியில் குறையடி போகட்டும் மறந்திடடி

சிறகே இல்லாத பூங்குருவி ஒன்று வானத்தில் தவிக்கிறது
துடுப்பே இல்லாத படகு ஒன்றை இன்று ஆழ் கடல் குடிகிறது

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

பாதை வழி மாறிப் போகுமோ பயணம் முடிந்திடுமோ
சோகம் உன் நெஞ்சில் மூழ்குமோ சொந்தம் கை தருமோ
அடி மாலை நீ தொடுக்கும் வேலை வரும் போது
பூக்கள் சருகானதே
இங்கு உருகும் மெழுகொன்று சுடரும்
வரம் கொண்டு புயலுடன் தடுமாறுதே
பாலுடன் வெண்மையாய் கலந்த சோகங்கள்
பெண்மைக்கு நிரந்தரமா
மானுட வேதங்கள் தாவிலும் வேதங்கள்
உண்மைக்கு வழி விடுமா

சிறகே இல்லாத பூங்குருவி ஒன்று வானத்தில் தவிக்கிறது
துடுப்பே இல்லாத படகு ஒன்றை இன்று ஆழ் கடல் குடிகிறது

உதய காலமே இரவு ஆனதே யார் செய்த பாவமடி விழுது
இன்றுதான் வேரைத் தின்றதே யார் தந்த சாபமடி

சிறகே இல்லாத பூங்குருவி ஒன்று வானத்தில் தவிக்கிறது
துடுப்பே இல்லாத படகு ஒன்றை இன்று ஆழ் கடல் குடிகிறது

WRITERS

Vaasan, Raj

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other