எங்கோ தொலைந்தவன் நானே உன்னுள் பிறந்துவிட்டேன்
மீண்டும் உயிர்த்தரித்தேன் விழியில் உன்னை அணைக்கும் போதே
வார்த்தைகளே இல்லாமலே பேசிக்கொள்ளும் மௌனம்
கண்ணீரிலே கொண்டாடுதே காதல்கொள்ளும் தாகம்
என்னைத் தொலைத்தேன் தவித்தேன் சருகாய் உதிர்ந்தேன்

எனக்கெனவே பிறந்தவளே உனக்கெனவே வந்தேனே
தனிமை இனி எனக்கில்லையே நீ இறந்தால் சென்றேனே
ஒரு நொடி போதும் போதும் பெண்ணே உன் தோளில் சாய கேட்கிறேன்
மறுகணம் உயிரே போகும் கண்ணே நீ மறைந்தால்…
எங்கோ தொலைந்தவன் நானே உன்னுள் பிறந்துவிட்டேன்
மீண்டும் உயிர்த்தரித்தேன் விழியில் உன்னை அணைக்கும் போதே
முதல் வரிகள் கொடுத்தவளே முகவரியும் நீ தானே
இதயத்திலே நுழைந்தவளே இமயத்திலே பூத்தாளே
காலம் சிந்தும் காதல் துளியில் நனைந்தேன் நனைந்தேன் அன்பே