நூறு தல முறையா ஊராளும் குலமே
வீர பரம்பரைக்கு வித்தான இனமே
கத்தி தீட்ட வந்தா உன் நெஞ்செடுத்து காமி
மானமுள்ள வீரமுள்ள வம்சம் வருதையா
அட மறையாத சூரியனின் அம்சம் வருதையா
வெட்டருவா விரலிருக்கும் சிங்கம் வருதையா
எங்க தன்மானம் காத்து நிக்கும் தங்கம் வருதையா
எட்டு பட்டி சனத்துக்கும் சாமி போலடா
அய்யா நிழலு கூட சாஞ்சதுள்ள பூமி மேலடா
நீ தல குனிஞ்சு யாரும் பார்த்ததில்ல
உங்க தல நிமிர்ந்து நாங்க பார்த்ததில்ல
கத்தி தீட்ட வந்தா உன் நெஞ்செடுத்து காமி
அள்ளி அள்ளி கொடுத்ததில்லே சிவந்த கையடா
இது அருவாள தூக்கி நின்ன அய்யனாருடா
கம்ப கூழு குடிக்கும் ஒரு கடவுள் ஏதுடா
அத எங்க ஊரு எல்ல குள்ள வந்து பாரடா
நம்ம வம்சத்துல ஒருத்தன் கூட கோழை இல்ல டா
அய்யா வாழும் மண்ணுல யாரும் இங்கே ஏழை இல்லடா
இது பரம்பரைய அள்ளி தந்த வானம்
ஏழு தலைமுறையா வாழ்ந்து வரும் மானம்
கத்தி தீட்ட வந்தா உன் நெஞ்செடுத்து காமி
நூறு தல முறையா ஊராளும் குலமே
வீர பரம்பரைக்கு வித்தான இனமே
கத்தி தீட்ட வந்தா உன் நெஞ்செடுத்து காமி