LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Naa Solli Suthala Bhoomi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆழ் கடல் வான் வெளி
ஆள்ந்திடும் மானுடன் நான்

சூரியன் சாய்ந்ததும்
ஒளி சூழ்ந்திடும் காரணம் நான்

கொடிய காடும் மலையும் கரடும் முரடும் இனிய பாதை ஆச்சு
பரந்து விரிந்த பூமி என்னுள்ளங்கையில் சிறிய Global village ஆச்சு
ஓயாமல் சுற்றும் உலகம் கூட எந்தன் காலின் கீழாச்சு
ஆனாலும்
நான் சொல்லி சுத்தல பூமி

பேரிடர் போரிட
யாரிடம் உண்டு யுக்தி
மாண்டதும் உயிர் மீட்டிட
யாரிடம் உண்டு சக்தி
ஆயிரம் உயிர் காத்திடும்
பேர்களும் மாளுவார் தாம்
போர்களும் வென்ற போதிலும்
வேட்டையில் வாடினோம் நாம்

ஆண்டத்தினால் ஆண்டவனாய்
ஆணவத்தால் நினைத்தேன்
நான் இறைவனென்றால்
என் இனமே வீழ்வது ஏன்

இனி நாம் எல்லாம்
வீட்டின் சிறையில் அடைந்து நொடிந்து அனைத்தும் கேள்வி ஆச்சு
இயற்கை யாவும்
துளிர்ந்து பரந்து விரிந்து சிரித்து மகிழ்ந்தே ஹாயாச்சு
எந்தவில்லாமல் மனிதம் தவிர உலகில் அனைத்தும் சீராச்சு
ஏனென்றால்
நான் சொல்லி சுத்தல பூமி

பேரிடர் போரிட
யாரிடம் உண்டு யுக்தி
மாண்டதும் உயிர் மீட்டிட
யாரிடம் உண்டு சக்தி
ஆயிரம் உயிர் காத்திடும்
பேர்களும் மாளுவார் தாம்
போர்களும் வென்ற போதிலும்
வேட்டையில் வாடினோம் நாம்
பா ப் ப பா பா ப் ப பா பா ப் ப பா பா ப் ப பா
பா பா ப் ப பா பா ப் ப பா ப் ப பா உ உ உ உ உ
நான் சொல்லி சுத்தல பூமி

WRITERS

Senthil Raj

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Sadness

Sentiment
Thumbsup Icon
Theme

None

From This Artist