LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ola Ola Kudisayila

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ

ஓலை ஓலை குடிசையில
ஒண்ட வந்த சீமாட்டி
உன்ன நான் வச்சிக்குவேன்
உசுருக்குள்ள தாலாட்டி

ஆறே காஞ்ச போதும்
அன்புல நீ நீராடு
சோறே இல்லனாலும்
சொந்தம் இருக்கும் உன்னோடு

வா சீக்கிரம் பூவோடத்தான்
நா இப்பவே உன் கூடதான்

வா சீக்கிரம் பூவோடத்தான்
நா இப்பவே உன் கூடதான்

வாசலில கோலமிட ஆசப்பட வேணாமே
வாசலே இல்லா வீட்டில் பூசணிப் பூ நீதானே

வைரத்துல தோடு செஞ்சு
போட்டுக்கொள்ள வேணாமே
வைரமா நீயும் சேர
நகையும் நட்டும் பொய்தானே

வேர்வையில நூலெடுத்து
சேலை நெஞ்சு நா தருவேன்
வெக்கப்பட்டு நீ சிரிச்சா கட்டிக்குவேன்

கூடி கலைஞ்ச பிறகும்
என் பாசம் ஊறுதே

ஏறு வெயிலப் போல
சந்தோஷம் கூடுதே

ஓலை ஓலை குடிசையில
உன்ன நா வச்சிக்குவேன்

மாசம் சில போனதுமே
மாணிக்கமா ரெட்ட புள்ள
ஒன்னா நீ பெத்துத் தந்தா
மருத்துவச்சி பில்லு மிச்சம்

பெத்தெடுத்த பிள்ளைகள
ரத்தினம் போல் ஆக்கனுமே
இங்கிலீசும் படிக்க வச்சு
ஏரோப் பிளேனில் ஏத்தனுமே

துணையா சேந்திருந்தா நள்ளிரவு வெள்ளிவரும்
தும்மலிடும் சத்தத்துக்கே சாமிவரும்

வாழ வேணும் நாம
மழைக்காத்து பூமியா

ஆசை தீர வாழ்ந்தா
மறு சென்மம் தேவையா

ஓலை ஓலை குடிசையில
ஒண்ட வந்த சீமாட்டி
உன்ன நான் வச்சிக்குவேன்
உசுருக்குள்ள தாலாட்டி

ஆறே காஞ்ச போதும்
அன்புல நீ நீராடு சோறே
இல்லனாலும் சொந்தம் இருக்கும் உன்னோடு

வா சீக்கிரம் பூவோடத்தான்
நா இப்பவே உன் கூட தான்

வா சீக்கிரம் பூவோடத்தான்
நா இப்பவே உன் கூட தான்

WRITERS

Sean Roldan, Yugabharathi

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other