என்னால் இந்நாள் உன்னால் இனி வாழ்வேனடா
விழுந்தாலும் என்னை பிடித்து
உடைந்தாலும் என்னை அணைத்து
என்னால் இந்நாள் உன்னால் மீண்டும் பிறந்தேனடா
தோகையாக நீ வந்து என்னை அணைக்கிறாய்
என்னுயிரே கரையை தொடும் மழையை போல
என்னில் நீயும் உன்னில் நானும்
என்னில் உன்னை உன்னில் என்னை நான் காண்கிறேன்
என்னில் உன்னை உன்னில் என்னை நான் காண்கிறேன்
உன்னாலே நான் மீண்டும் பிறந்தேன்
தன்னாலே நான் மீண்டும் எழுந்தேன்
மேகத்தினை தொட்டு உந்தன் காதல் பட்டு
மீண்டும் உன்னில் நானும் விழுந்தேன்
உனுள்ளே நான் கொஞ்சம் வசித்தேன்
ஏனோ என்னுள்ளே நான் உன்னை ரசித்தேன்
உன் குழந்தை போன்ற சிரிப்பை காக்க
நானும் கொஞ்சம் இங்கு முயன்றேன்
கண்ணாளனே உன்னை காண்கிறேன்
உன்னை கண்டதும் காணாமல் போகிறேன்
கட்டு மூங்கிலின் வாசம் நிற்காமல் வீசும்
அதுபோலே குறையாதே நம்முள் உள்ள நேசம்
உன் வசம் என்னை நீ இழுத்தாய்
உன் பாசத்தால் என்னை நான் தொலைத்தேன்
இனி எது வந்தாலும் எது போனாலும்
நீ மட்டும் போதும்னு உள்ளுக்குள் துடித்தேன்
என்னால் இந்நாள் உன்னால் இனி வாழ்வேனடா
விழுந்தாலும் என்னை பிடித்து
உடைந்தாலும் என்னை அணைத்து
என்னால் இந்நாள் உன்னால் மீண்டும் பிறந்தேனடா
தோகையாக நீ வந்து என்னை அணைக்கிறாய்
என்னில் நீயும் உன்னில் நானும்