கைவிடுவானா நம்மைத் தணிகை முருகன்
கைவிடுவானா நம்மைத் தணிகை முருகன்
தணிகை வேலன் என்றால் அவன் நேரில் தோன்றுவார்
இரு கை கொண்டு நம்மை கைதூக்கி அருளுவார்
முருகா என்று சொன்னால் நம்மை நாளும் தாங்குவான்
முருகா என்று சொன்னால் நம்மை நாளும் தாங்குவான்
குன்றில் நின்றாடும் கந்த வடிவேலன்
நெஞ்சில் வந்தாடும் ஞான சிவபாலன்
காவலாகி கோவிலாளும் தணிகை முருகனே
கைவிடுவானா நம்மைத் தணிகை முருகன்
எங்கெங்கோ அலைகின்றாய் ஏதும் அறியாமலே
உந்தன் நிலையேனோ உணராயோ தெரியாயோ
எங்கெங்கோ அலைகின்றாய் ஏதும் அறியாமலே
உந்தன் நிலையேனோ உணராயோ தெரியாயோ
கந்தன் திருப்பாதம் காணும் அருள் நேரம்
இன்னும் வந்து சேரவில்லையோ
கந்தன் திருப்பாதம் காணும் அருள் நேரம்
இன்னும் வந்து சேரவில்லையோ
திசைகள் மலையேறி தெளிவாகும்
அசியும் மனமெங்கும் அவனாகும்
திசைகள் மலையேறி தெளிவாகும்
அசியும் மனமெங்கும் அவனாகும்
தானாய் வந்து உன்னைக் கரை சேர்ப்பான்
தானாய் வந்து உன்னைக் கரை சேர்ப்பான்
குன்றில் நின்றாடும் கந்த வடிவேலன்
நெஞ்சில் வந்தாடும் ஞான சிவபாலன்
காவலாகி கோவிலாளும் தணிகை முருகனே
கைவிடுவானா நம்மைத் தணிகை முருகன்
பொன் தேடிப் பொருள் தேடி காலம் கரைகின்றதே
மண்குதிரை நீரில் கரையாதோ மறையாதோ
பொன் தேடிப் பொருள் தேடி காலம் கரைகின்றதே
மண்குதிரை நீரில் கரையாதோ மறையாதோ
வந்தான் மயில் மீது வந்தான்
கனி தேடி வந்த நாதன் கண்கள் தேடுவான்
வந்தான் மயில் மீது வந்தான்
கனி தேடி வந்த நாதன் கண்கள் தேடுவான்
அருவி அவன் கண்கள் அதை நாடு
அருவி அவன் கண்கள் அதை நாடு
தாயாய் வந்து உந்தன் உயிர் காப்பான்
தாயாய் வந்து உந்தன் உயிர் காப்பான்
குன்றில் நின்றாடும் கந்த வடிவேலன்
நெஞ்சில் வந்தாடும் ஞான சிவபாலன்
காவலாகி கோவிலாளும் தணிகை முருகனே
கைவிடுவானா நம்மைத் தணிகை முருகன்
தணிகை வேலன் என்றால் அவன் நேரில் தோன்றுவார்
இரு கை கொண்டு நம்மை கைதூக்கி அருளுவார்
முருகா என்று சொன்னால் நம்மை நாளும் தாங்குவான்
முருகா என்று சொன்னால் நம்மை நாளும் தாங்குவான்
குன்றில் நின்றாடும் கந்த வடிவேலன்
நெஞ்சில் வந்தாடும் ஞான சிவபாலன்
காவலாகி கோவிலாளும் தணிகை முருகனே
கைவிடுவானா நம்மைத் தணிகை முருகன்