குன்றுதோராடி வரும் குமரரேசா
குன்றுதோராடி வரும் குமரரேசா
எங்கள் குலம் வாழத் தலம் கொண்ட மயில்வீரா
குன்றுதோராடி வரும் குமரரேசா
எங்கள் குலம் வாழத் தலம் கொண்ட மயில்வீரா
குன்றுதோராடி வரும் குமரரேசா
பெரும் புகழ் உனக்குண்டு பலவாக
உந்தன் திருப்புகழ் எனக்கு இங்கு நான் பாட
பெரும் புகழ் உனக்குண்டு பலவாக
உந்தன் திருப்புகழ் எனக்கு இங்கு நான் பாட
குன்றுதோராடி வரும் குமரரேசா
எங்கள் குலம் வாழத் தலம் கொண்ட மயில்வீரா
குன்றுதோராடி வரும் குமரரேசா
வானின் காலைக் கதிர் எழுந்து தாள் போற்ற
வானின் காலைக் கதிர் எழுந்து தாள் போற்ற
வண்ணக் குங்கும மருதமலை அமர்வோனே
ஐயா எங்கள் மருதமலை முருகோனே
ஆடும் புள்ளி மயில் அடங்கி நிற்க
அது அழகிய குன்றாக நிமிர்ந்து இருக்க
ஆடும் புள்ளி மயில் அடங்கி நிற்க
அது அழகிய குன்றாக நிமிர்ந்து இருக்க
எங்கள் குன்றக்குடியானே பெருமானே
சிவ குருபரனே குன்றக்குடியானே
ஞானத் தபோதனரின் வடிவமெனத் தோன்றும்
நந்தவனம் சூழும் குன்றினிலே
ஞானத் தபோதனரின் வடிவமெனத் தோன்றும்
நந்தவனம் சூழும் குன்றினிலே
நாதம் இசைந்து நல்ல பிரணவம் எழ
நாதம் இசைந்து நல்ல பிரணவம் எழ
அங்கே நிறைந்தவனே பிராலி மலையானே
வள்ளியைத் தந்தளித்த மண்ணினிலே
நின்ற வண்ணச் சிறுமலையில் வளர்ந்தவனே
வள்ளியைத் தந்தளித்த மண்ணினிலே
நின்ற வண்ணச் சிறுமலையில் வளர்ந்தவனே
தெள்ளுத் தமிழும் தினைப் புலமும் கொஞ்சும்
தெள்ளுத் தமிழும் தினைப் புலமும் கொஞ்சும்
திருவள்ளி மலையாழும் மயிலோனே
வள்ளி மனம் வாழும் பெருமானே
கருணையின் உருவான கனகசிவன்
அவன் கண்ணாரத் தினம் காண நிறைந்தவனே
கருணையின் உருவான கனகசிவன்
அவன் கண்ணாரத் தினம் காண நிறைந்தவனே
திருப்புகழின் அடியவனை உயர்த்தவனே
திருப்புகழின் அடியவனை உயர்த்தவனே
ஐயா திருவண்ணாமலையின் இளையவனே
ஐயா திருவண்ணாமலையின் இளையவனே