மயிலாடும் மலை எங்கும் திருமுருகன் அழகு பெருகும்
மனமாறும் விழியாரும் மலைமருகன் அருளில் உருகும்

வேல ஏந்தும் பாலரூபம் ஞான மேகமாக
வேல ஏந்தும் பாலரூபம் ஞான மேகமாக
நம்மை ஆளும் நாளும் வரமென்னும் மழையில் உயிரை ஆற்றும்
வேலொன்று வழிதரவே அறிவாய் மனமே
வேலன் தாளொன்று தயை தரவே யாவும் ஜெயமே

பேசிடும் வதனமோராறு வீசிடும் விழிகளீராறு
பேரருளின் கோலமெல்லாம் அதிசயமாகிடுமே
பேசிடும் வதனமோராறு வீசிடும் விழிகளீராறு
பேரருளின் கோலமெல்லாம் அதிசயமாகிடுமே
பச்சைமலை குளிர் தென்றல் அர்ச்சனைக்கு மலை ஏறும்
ஆதி வழி காடுகளில் பாடி விளையாடி எழும்
ஓம் என்ற பிரணவ நாதம் கேட்கும் ஊரெங்கும் திசைகள் அதனை ஏற்கும்

அறியாமல் நிலையாகும் மனதினிசைதூவும் ஓர் மலராய் மனம் மாறும்
வேலொன்று வழிதரவே அறிவாய் மனமே
வேலன் தாளொன்று தயை தரவே யாவும் ஜெயமே
மயிலாடும் மலை எங்கும் திருமுருகன் அழகு பெருகும்
மனமாறும் விழியாரும் மலைமருகன் அருளில் உருகும்
சரவணபவ சரவணபவ சரவணபவ சண்முகமே
சரவணபவ சரவணபவ சரவணபவ சண்முகமே
மந்திரம் என்பதோராறு சுந்தரக் கைகளீராறு
கந்தனையே காண்கையிலே பரவசமாகிடுமே
சரவணபவ சரவணபவ சரவணபவ சண்முகமே
மந்திரம் என்பதோராறு சுந்தரக் கைகளீராறு
கந்தனையே காண்கையிலே பரவசமாகிடுமே
ஐந்து முகம் தோன்றின் அதிசிவம் தோன்றும்
ஐயன் சிவனாக ஆறு முகம் தோன்றும்
யாம் என்ற முருகன் கோலம் தோன்றும் தான் நின்ற பயம் அகன்று போகும்

மலைவேந்தன் விழியடா தீமை நிலை சாயும் ஓர் மாய விளை போகும்