என்னை பாட வைக்கும் தெய்வம் நீதானே முருகா
சிந்தை என்னும் அரியாணை ஏறும் ஞானம் நீ முருகா
முருகா என்று ஒருமுறை சொன்னால் நெஞ்சம் இனிக்குதே

உருகாத உள்ளம் கூட உணர்வில் மறக்குதே
எங்கள் முத்தை திருநகை சக்தி குருபர நீ ஐயா

நெஞ்சம் முழுதும் கந்தர் அனுபூதி பாட பாட பரவசம்
திருநீறை அணிந்த உந்தன் கோலம் மனதில் நிறைந்து நிலை பெறும்

முருகா உன் புகழ் மாலை அதுதான் என்றும் பாமாலை

பாடலெல்லாம் உன் பெருமை மனமாய் வீசுதே
அதை பாட பாட நெஞ்சம் கனிந்து பக்தியில் ஊருதே
எங்கள் முத்தை திருநகை சக்தி குருபர நீ ஐயா
கந்தா உந்தன் கவசம் சொன்னால் காவல் என்பது நிச்சயம்
அது காதில் ஒலிக்கக் கேட்டால் கூட கவலை எல்லாம் போய் விடும்

கந்தா உன் பெயர் பேசும் எதுவும் கந்தர் அலங்காரம்

அலங்கார தெளிவாக அறிவில் சுடருவாய்
என் அந்தம் உந்தன் நினைவினில் ஆடும் அதுவும் சீரலைவாய்
என்னை பாட வைக்கும் தெய்வம் நீதானே முருகா
சிந்தை என்னும் அரியாணை ஏறும் ஞானம் நீ முருகா
முருகா என்று ஒருமுறை சொன்னால் நெஞ்சம் இனிக்குதே
முருகா என்று ஒருமுறை சொன்னால் நெஞ்சம் இனிக்குதே
உருகாத உள்ளம் கூட உணர்வில் மறக்குதே
எங்கள் முத்தை திருநகை சக்தி குருபர நீ ஐயா
எங்கள் முத்தை திருநகை சக்தி குருபர நீ ஐயா
என்னை பாட வைக்கும் தெய்வம் நீதானே முருகா
என்னை பாட வைக்கும் தெய்வம் நீதானே முருகா
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED