தீராத வினைகளை தீர்க்கின்ற வேலவா
உந்தன் முருகாற்றுப் படையினை மனதாரப் பாடினும்
முகம் காட்டி நீயுமே வரணும்
முகம் காட்டி நீயுமே வரணும்
வா வா முருகனே வரம் தா தா குமரனே
வா வா முருகனே வரம் தா தா குமரனே
கந்தா முருகா என்று சொல்வார்
மனக்கண்ணில் தெரியும் வடிவேலா
கந்தா முருகா என்று சொல்வார்
மனக்கண்ணில் தெரியும் வடிவேலா
ஆற்றுப்படை நாயகனே... ஆறுதல் தருபவனே...
ஐயா பரங்குன்றின் முருகோனே...
தெய்வானை மணவாழகா ... எங்கள் தேவாதி தேவா நீ வா...
தெய்வானை மணவாழகா ... எங்கள் தேவாதி தேவா நீ வா...
வா வா முருகனே வரம் தா தா குமரனே
நீரோடு மலரும் செந்தூரக் கமலம்
நீரோடு மலரும் செந்தூரக் கமலம்
ஞான பஞ்சாட்சரம் அதிலே தோற்றம் கொண்ட முருகா
தெய்வ ஷடாட்சரம் நீயே நெஞ்சில் ஏற்றம் தருவாய்
ஐயா சன்னதி வீதி வந்தோம்... முருகா முருகா முருகா முருகா
ஆறெழுத்தை ஓதி வந்தோம்... முருகா முருகா முருகா முருகா
ஐயா சன்னதி வீதி வந்தோம்... ஆறெழுத்தை ஓதி வந்தோம்...
அழகா... குமரா... உன் நாமம் சொல்லும் உள்ளங்கள் என்றும்
உன் காவல் ஏற்றிடும் முருகா...
இந்த உலகை ஆளும் மால் மருகா...
தெய்வானை மணவாழகா ... எங்கள் தேவாதி தேவா நீ வா...
தெய்வானை மணவாழகா ... எங்கள் தேவாதி தேவா நீ வா...
வா வா முருகனே வரம் தா தா குமரனே
கூராடும் வேலால் குன்றாடி வந்து
நக்கீரன் குறையைத் தீர்த்தாயே...
கூராடும் வேலால் குன்றாடி வந்து
நக்கீரன் குறையைத் தீர்த்தாயே...
உருகும் பஞ்சாமிர்தம் அதிலே உருகும் இனிய முருகா
உலகின் தேவாமிர்தம் எங்கள் பிறவிப் பிணி தீர்க்கவா
மலையடிவாரம் நாடி வந்தோம்... முருகா முருகா முருகா முருகா
மஞ்சன அழகைக் காண வந்தோம்... முருகா முருகா முருகா முருகா
மலையடிவாரம் நாடி வந்தோம்... மஞ்சன அழகைக் காண வந்தோம்...
பரமா... பாலா... தெய்வானையோடு ஐயா உன் கோலம்
அதை யாம் காண பாக்கியம் குமரா...