சிலுத்துக்கின்னு என் மனசு சிரிக்குதே
காதல் என்ன கூட்டிக்கின்னு
சைலண்ட்டுகா வானத்துல பறக்குதே
பாரிமுனை தெருவுல நடந்த பைய
பரிஸ்சுல காதல் வந்து மிதக்குறானே
சென்னைத் தமிழ்கவிஞனா கிடந்த பைய
பிரெஞ்சு இப்ப பிரிச்சுத்தான் மேயுறானே
சாக்குலேட்டின் தித்திப்புல பாதி
லிக்கர் காபி கசப்புல பாதி
திருடிட வந்தான் காதல்வாதி
ஏய்… வெண்ணப் பூவே… வெண்ணப் பூவே
இந்த ரொட்டியில ஒட்டிக்கிற நீயே
என்னத் தண்ணியின்னு பண்ணிக்கின்ன நீயே
திருடிட வந்தான் காதல்வாதி
சிலுத்துக்கின்னு என் மனசு சிரிக்குதே
என் மாமன்கிட்ட எக்கச்சக்க வித்தை இருக்கு
நேரம் வர ஒன்னு ஒன்னா நீ இறக்கு
ஏ பொண்ணுக்குள்ள எக்கச்சக்க போதை இருக்கு
நாளும் இனி நீ தானே சரக்கு
சிலுத்துக்கிட்டு என் மனசு சிரிக்குதே
காதல் ரெக்கை மாட்டிக்கிட்டு
பாய்ஞ்சு அந்த வானத்துல பறக்குதே
ஓவியத்தில் மோனாலிசா சிரிப்பிருக்கு
லவ்வர் கண்ணில் இவளோட சிரிப்பிருக்கு
பாரிஸ் இது காதலுக்கு தலைநகரு
பாத்து சொல்லு ஜோடி நமக்காரு நிகரு
ஓவியத்தில் மோனாலிசா சிரிப்பிருக்கு
லவ்வர் கண்ணில் இவளோட சிரிப்பிருக்கு
பாரிஸ் இது காதலுக்கு தலைநகரு
பாத்து சொல்லு ஜோடி நமக்காரு நிகரு