LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kanthar Koottam

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
சிந்தனையில தீ பறக்குது
திரும்பிய இடம் கொட பிடிக்குது
பகை எடுத்தவன் படை கொடுத்தவன்
பகலவன் இனி வழி விலகிடு

சினம் கொண்ட சிங்கம் அனுங்குது
காலம் மறக்காத வீர தமிழரின்
படை எடுத்தும் நிலம் அதிருது
எதிர் படை எட்டு அடி தவறுது

நான் நின்னா மலை நடந்த
படை கடந்தால் பொறி தட்டும்

நாங்க பறந்தா இடி விழுந்தா
சதி சாவின் நுனி யுத்தம்

ஹே சந்தியில பிடிச்ச பிள்ளையார்
எடுத்து வக்கிறோம் முதல் அடி
சண்டையில தலை எடுக்கிற பரம்பரை
நாங்க தனி வழி

சாகாத வரம் எமக்கு
தந்தவனே துணிவிருக்கு
வேல் எடுத்து எரிஞ்சவர்கள்
வேங்கை நாங்கள் மறு பிறப்பு

சேர சோழ பாண்டிய பண்டார
வன்னியன் வீர அக்கரையன்
அது வழி வந்த எங்கள் அண்ணன்
அடுத்த ராவணன்

ஹே எத்தனை முறை நான் சொல்லுவேன் உனக்கு
ரத்தத்தில் ஓடுது ராணுவ துடிப்பு
சத்தியம் தாயகம் வெல்கிற வரைக்கும்
நிச்சயம் எங்களின் வேங்கைகள் இருக்கு

வளரி ஏறி போல் வார்த்தைகள்
வகுண்டு வருது பார்த்து கொள்
பருவம் அடைந்த வார்த்தைகள்
இனி பல பலக்குது பாடுக்குள்

கடலே என் கடலே
கரிகாலா எங்க மறஞ்ச
வனமே என் வனமே
அவன் தடம் தேடி திரிஞ்ச

கடலே என் கடலே
கரிகாலா எங்க மறஞ்ச
வனமே என் வனமே
அவன் தடம் தேடி திரிஞ்ச

குலசாமி ஒருத்தன் இருந்தான்
நிலம் காக்க குருதி கொடுத்தான்
நடு நேரம் நிசியில் நடந்தால்
விளக்காக வீதியில் இருப்பான்

ஆணை சேனை அரவம் புரை ஆண்ட
தமிழர் கூட்டம்
குறையாத வேகம் குருதி தாகம்
கடந்த காலம் பேசும்

இனி நேரம் காலம் பார்த்து
படை இறங்க போகுது புதுசு
இது பாட்டன் தந்த பூமி
நீ பரிசளிக்கிற நமக்கு

வன்னி காட்டில ரெண்டு காலில வரிப்புலி
நடந்தது தெரியுமா
அந்த நாட்டில வந்து பிறந்தவன் எந்தன்
குருதி தாகம் அடங்குமா
குட்ட குட்ட குனியவில்லை குள்ளநரி இனத்துக்குள்ள
கோபுரத்தில் இருந்தவங்க குப்பை நடு வீதியில

ஆனா ஊனா எதிரி அடங்க தலைவன் குடும்பி
வானம் வரைக்கும் வாழ்த்தும் வணங்க ஒருவன் வாழ்த்தி
ஆரியப்பன் கடந்து வந்தவன் பாண்டியன் நெடு செழியன்
அந்த காவிரிக்கு ஒரு அணை எடுத்தவன் கரிகால்வளவ சோழன்

அங்கு காக்க வன்னியன் காட்டி தந்தவன்
திராவிடன் பழி தீர்க்க வந்தவன்
அரியதுக்கு கொடி புடித்தவன் திராவிடன் அடிவருதி
இங்கு நீயும் நானும் தமிழன்
நடுவில வேண்டாம் ஒருவன்
அந்த காலம் வரைக்கும் இருக்கும்
கரிகாலன் கதைகள் நிலைக்கும்

கடலே என் கடலே
கரிகாலா எங்க மறஞ்ச
வனமே என் வனமே
அவன் தடம் தேடி திரிஞ்ச

குலசாமி ஒருத்தன் இருந்தான்
நிலம் காக்க குருதி கொடுத்தான்
நடு நேரம் நிசியில் நடந்தால்
விளக்காக வீதியில் இருப்பான்

மானம் கொண்ட நரம்பு துடிக்க புலி உறும்புது
உருமி மேளம்
பாட்டன் பூட்டன் ஆண்ட கொண்ட மண்புழுவுக்கு
என்ன வேணும்
வன்னி காட்டு வேங்கை விதைத்த ஒரு தலைவனின்
தலைமுறை
நாங்கள் களமிறங்கிய சொந்தங்கள் சந்ததி
தமிழினம் என் உயிர் பெற

தோட்டா தோட்டா தெறிக்கிற சத்தம் கேட்டா நடுங்குற
வெடி முழங்குற உணர்வெகுருது தமிழ் இனமென படை பெருகுது
பெண்கள் ஆயுதம் ஏந்தி ஆண்களை காத்த கதைய பாடு
தனிப்பட்ட மண்ணை பெற்றெடுத்த மாண்ட வீரர் பாரு

அடிமை படுத்த பட்டவர் படித்து பட்டம் பெற்றவர்
படித்த படிப்பு வேலம் இன்றி தினமும் பொறுப்பில் செத்தவர்
என் நாவில் இருக்கும் ஈட்டி வார்த்தைகளை நெருப்பில் தீட்டி
அதிகாலை மரண செய்தி குறி பார்த்து விட்டேன்டா ஆவி

குரங்கு கூட்டம் உதவி செய்து
காட்டி கொடுத்தது ராம சேது
வானரம் என்று வடக்கு சொன்னா தெற்கு
தமிழா திருப்ப கேளு

வரலாறு தான் மாற்றி எழுது
அடையாளத்தை தெளிவா திருட்டு
தடம் மாற்றிய எகிறி சொல்லு
முடி மறச்சா பறக்கும் பல்லு

கடலே என் கடலே
கரிகாலா எங்க மறஞ்ச
வனமே என் வனமே
அவன் தடம் தேடி திரிஞ்ச

குலசாமி ஒருத்தன் இருந்தான்
நிலம் காக்க குருதி கொடுத்தான்
நடு நேரம் நிசியில் நடந்தால்
விளக்காக வீதியில் இருப்பான்

ஹே பாணன் பறையன் கடம்பன் துடியன் குடிகள் ஆதி
அறிய பார்ப்பானை வந்து புகுந்தான் தமிழ் பதி பதி
பரம்பு மலையில் பாறையின் குதிர்கள் புயலென பாய்ந்தென
பரத்தவர் கடலிலே படகுகள் எதிரிகள் புடை சூழ்ந்தென

தமிழ் இல்லாத குலம் சொல்லாத பலம்
முப்பாட்டன் கொடை வித்தாக வரும்
காலம் மாறி கடந்த பிறகும் கரிய மேகம் பிறந்தோம்

இது வர்ண சிரம சாதி
நடை படிகள் இல்லாத மாடி
அந்நாள் அம்பேத்கார் இதை
அன்று உரைத்தார் கலை வடிவங்கள் வாழி
அந்த குறுஞ்சி முல்லை மருதம் நொய்தல் தமிழர் நிலங்கள்
இதில் வாழ்ந்து வளர்ந்து பிறந்து வந்தது தமிழனோட நிலைகள்

ஓ பார்ப்பானின் கூட்டத்தில நடு வீடுக்குள்ள
நாங்கள் மணி அடித்தால்
காட்டுக்குள்ள வந்தவரை கொடும்
புலி அடித்தது அதை அவிழ்ப்பார்
பருவம் பகையும் நடுங்கும் எதிலும் தமிழன் இயங்கும்
இழந்த போரில் எதிரி என் பாட்டனுக்கு ஒரு பருதி

ஹே வெள்ள வேட்டி அரசியல் இங்கு வேதம் சொல்லும் ஆரியர்
மந்தைவெளி சாதியர் நம்மை பிரிக்க வளர்ந்த வியாதிகள்

கடலே என் கடலே
கரிகாலா எங்க மறஞ்ச
வனமே என் வனமே
அவன் தடம் தேடி திரிஞ்ச

கடலே என் கடலே
கரிகாலா எங்க மறஞ்ச
வனமே என் வனமே
அவன் தடம் தேடி திரிஞ்ச

குலசாமி ஒருத்தன் இருந்தான்
நிலம் காக்க குருதி கொடுத்தான்
நடு நேரம் நிசியில் நடந்தால்
விளக்காக வீதியில் இருப்பான்

WRITERS

KAJITH SRISKANTHARASA

PUBLISHERS

Lyrics © TuneCore Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Anger

Sentiment
Thumbsup Icon
Theme

None