LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Engal Vaazhvil Oli Ettra

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
எங்கள் வாழ்வில் ஒளி ஏற்ற எழுந்தருளிய பெஹன்ஜி
கடவுளின் கருவியாக கால் பதித்தாய் தமிழகத்தில்
எங்கள் வாழ்வில் ஒளி ஏற்ற எழுந்தருளிய பெஹன்ஜி
கடவுளின் கருவியாக எழுந்தருளிய ரோஸி பெஹன்ஜி
ஒரு புறம் சாந்தா பெஹன்ஜி மறுபுறம் லட்சுமி பெஹன்ஜி
என முப்பெரும் தேவியராய் தென்னகத்தை புனிதமாக்க
நீங்கள் படைத்த ஞான வேள்வி நான்கு திசையும் ஒளிருது இங்கே
நீங்கள் படைத்த ஞான வேள்வி நான்கு திசையும் ஒளிருது இங்கே
எங்கள் வாழ்வில் ஒளி ஏற்ற எழுந்தருளிய பெஹன்ஜி
கடவுளின் கருவியாக கால் பதித்தாய் தமிழகத்தில்

அஞ்ஞான நோய் அகற்றும் முக்தி என்னும் அருமருந்தை
இறைவனிடம் கற்றுணர்ந்து நமக்கெல்லாம் வழங்கினாய்
மெய்ஞான சுகம் அளிக்கும் ஜீவன் முக்தி என்னும் பரிசளிக்கும்
ராஜயோக இறை விருந்தை தென்திசைக்கும் சுமந்து வந்தாய்
மாயை என்னும் கடல் நடுவே துணிச்சல் என்னும் தோணியிலே
அவர்கள் பயணித்த பாதையெல்லாம் திசைகாட்டி ஆனதிங்கே
கருணை கொண்ட கண்டிப்பும் தினம் பரிவார சந்திப்பும்
அவர்கள் வெற்றி எனும் கரைசேர இரு துடுப்பாய் ஆனதிங்கே

கடவுள் வைத்த சோதனையில் கடுகளவும் கலங்காமல்
சாதனையாய் அதை சாதித்து சத்தியத்தின் சான்றாய் நின்றாய்
தேசத்தின் தென்கோடியில் அவர் கால் பதித்து நின்றாலும்
பார்வையினால் உலகத்தை பார்வையிட்ட தெய்வமாய்
சேவை என்னும் படைநடுவே சிம்மவாகினியின் தோற்றத்திலே
அவர்கள் பவனி வந்த திசைகளெல்லாம்
பரமன் கொடி பறக்குதிங்கே
மதியுபன் இட்ட கட்டளையும் இறைவனிடம் பற்றுதலும்
இருவிழியாய் அவர்கள் காத்து விஸ்வ சேவையாய் மின்னுதிங்கே
விஸ்வ சேவையாய் மின்னுதிங்கே
எங்கள் வாழ்வில் ஒளி ஏற்ற எழுந்தருளிய பெஹன்ஜி
கடவுளின் கருவியாக கால் பதித்தாய் தமிழகத்தில்

WRITERS

N. Kumar, S. J. Jananiy

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup IconThumbsup Icon
Theme

None