சிநேகம் எழுக இதயங்கள் இணைக
மாந்தரெல் லோரும் சகோதரர் அறிக
போர்கள் மறைக போட்டி அகல்க
பிறர்பொருட்கேங்கும் பேதைமை தொலைக
புவித்தாய் தீர்ப்பாள் ஆசைகள் யாவும்
தவிப்போ ஓய்ந்திடும் அமைதியே ஆளும்
ஈகையும் அன்பும் இணைந்தால் மனிதம்
ஆதுரத்தோடே அனைவரும் வாழ்வோம்
நாமனைவோரும் நலமுற வாழ்வோம்