எந்த நெஞ்சம் ஈரம் இல்ல சம்சாரம்
சொந்தம் இங்கு சொந்தம் இல்ல சம்சாரம்
நேரம் வந்து நெருங்கி தொட்ட
அப்பன் என்ன ஆத்தா என்ன ஒப்புக்குத்தான்டி
பாறங்கல்ல பெத்துப்புட்ட பாசம் ஏதடி
பெற்ற புள்ள தந்த பணம் உப்புக்கு ஆகுமா
தாய்ப்பாலுக்கு கணக்குப்போட தாலி மிஞ்சுமோ
வாய்க்கட்டி வளத்தப்புள்ள மல்லுக்கட்டி நிக்குதடி
வாங்கித்தந்த காசுக்கெல்லாம் வட்டிகட்ட சொல்லுதடி
கோடு ஒன்னு கிழிக்கவெச்சு கும்மியடிக்குது அம்மடி
காலில் ஒரு முள்ளு தச்ச கண்ணு கலங்குது
கண்ணில் ஒரு துசு பட்ட கைதான் ஓடுது
சேவல் அன்று கோடு கிழிச்சு வேலிப்போட்டது
வேலி தாண்டி கோழி போக வேல வந்தது
அக்கம் பக்கம் யாரும் இல்ல
பாசத்துக்கு ரக்க முளைச்சு
எந்த சொந்தம் என்ன சொந்தம் யாருக்கும் தோணல
வாய்திறந்து சொல்லவந்த வார்த்த வரல
வானவில்ல சின்னபுல்ல வளைக்க பார்க்குது
ஆகாயத்தில் ஊஞ்சல் கட்ட ஆசப்படுது
சிறகொன்னு முளைக்கும் முன்னே
ஆத்துமேட்டில் எழுதி வெச்சத
வயசு வந்த புள்ள ஒன்னு பாடம் படிக்குது
அன்பு ஒன்றே வாழ்க்கை என்ற அர்த்தம் விளங்குது
கட்டிலுக்கு ஆசப்பட்டு புத்தி அலைஞ்சுது
கணவன் இங்கே பிள்ளை என்று கண்டுகொண்டது
காமத்துக்கும் மோகத்துக்கும்
இல்லறத்தில் இன்பத்துன்பம்
இரண்டும் உள்ளது பொன்னம்மா
நெஞ்சுக்குள்ள ஈரம் உண்டு சம்சாரம்
சொந்தத்துக்கும் உள்ளம் உண்டு சம்சாரம்
சூட்சுமத்தை தெரிஞ்சுகிட்ட ஒளிகொடுக்குற மின்சாரம்