LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Semmari Aade

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
செம்மறி ஆடே செம்மறி ஆடே

செம்மறி ஆடே செம்மறி ஆடே
செய்வது சரியா சொல்
ம்ஹும்
செவத்த பொண்ணு இவத்த நின்னு
தவிக்கலாமா சொல்

செம்மறி ஆடே செம்மறி ஆடே
செய்வது சரியா சொல்
ம்ஹும்
செவத்த பொண்ணு இவத்த நின்னு
தவிக்கலாமா சொல்

தவிக்கின்ற நெஞ்சம் இன்று
துணை ஒன்று பெறலாமா
துணை இங்கு நீ என்று
ஊர் சொல்ல வேண்டாமா

தவிக்கின்ற நெஞ்சம் இன்று
துணை ஒன்று பெறலாமா
துணை இங்கு நீ என்று ம்ஹீம்ம்ம்

ஆஹாஹ் செம்மறி ஆடே செம்மறி ஆடே
செய்வது சரியா சொல்
ம்ஹும்
செவத்த பொண்ணு இவத்த நின்னு
தவிக்கலாமா சொல்

டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
இய்யா இய்யா இய்யாவோ
எல்லா தெரிஞ்ச ஐயாவோ
எல்லா தெரிஞ்ச ஐயாவே
இய்யா இய்யா இய்யாவோ

செவலக்காள ரெண்டும் பூட்டி
வண்டி ஓட்ட தெரியாதா
வண்டிப்பாதை வீட்டுக்கு வருதே
பரிசம் போட முடியாதா

பாதைய காட்டுற பொண்ணே
பரிசத்த போடுறேன் முன்னே
மாலைக்கு ஏங்கிடும் கண்ணே
கழுத்துல தாலியும் போடுறேன் பின்னே

மலர் தேடும் மங்கை நெஞ்சம் தடுமாறுது
மணப்பந்தல் மனதில் கட்டி தினம் பாடுது
மலர் தேடும் மங்கை நெஞ்சம் தடுமாறுது
மணப்பந்தல் மனதில் கட்டி தினம் பாடுது

ம்ம்ஹும் செம்மறி ஆடே செம்மறி ஆடே
செய்வது சரியா சொல்
ம்ஹும்
செவத்த பொண்ணு இவத்த நின்னு
தவிக்கலாமா சொல்

மயிலக்காள மனசு
இந்த மயிலுக்குதான் தெரியாதா
தெரிஞ்சிருந்தும் புரிஞ்சிருந்தும்
வெளியில் சொல்ல முடியாதா

தவிக்குது தவிக்குது மனசு
அட தயங்குது மயங்குது எளசு
நெனைச்சதும் துடிக்குது வயசு
வெட்கம் தடுக்குது அனுபவம் புதுசு

மந்தை போகும் ஆட்டுக்குட்டி இனி போகட்டும்
சொந்தம் என்னும் சொல்லே இங்கு நிலையாகட்டும்
மந்தை போகும் ஆட்டுக்குட்டி இனி போகட்டும்
சொந்தம் என்னும் சொல்லே இங்கு நிலையாகட்டும்

ம்ம்ஹும் செம்மறி ஆடே செம்மறி ஆடே
செஞ்சது சரிதான் சொல்
ம்ஹும்
செவத்த பொண்ணு இவத்த நின்னு
தவிக்கலாமா சொல்(லலலலா லலலலா )

WRITERS

AABAVANAN

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other