LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Vinnodu Serade

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஏ ஓ ஓ ஓ ஏ ஏ ஏ
விண்ணோட சேராத மேகம் இல்ல
பொண்ணோட சேராத ஆணும் இல்ல
நீ இல்ல நாளெல்லம் நானும் இல்ல
பாட்டெல்லாம் பாடாத ராகம் இல்ல
ராகத்தில் சேராத வார்த்தை இல்ல
எழுத்துக்குள் இல்லாமல் எதுவும் இல்ல
என்னோட சேராத நட்பும் இல்ல
மண்ணோட போகாத மனுஷன் இல்ல
கண்ணோட சேராத பயனும் இல்ல
கடலோட சேராத ஆறும் இல்ல
கவியோட சேராத வருமை இல்ல
கருவோட சேராத கதையும் இல்ல
நிலவுக்கு போய் வந்த மனிஷங்களே
பொண்ணுக்குள் என்ன தான் புதைந்திருக்கோம்
பூவுக்குள் போய் வந்த தேனிக்களே
பொண்ணோட மனசுக்குள் என்ன இருக்கோ
காற்றோடு பேசிடும் மூங்கில்களே
கடலுக்குள் முத்தையும் போடுங்களே
உயிரோடு என்னையும் கொல்லுங்களே
உலகோடு என் சோகம் சொல்லுங்களே
பூவோடு சேராத நாரும் இல்ல
வேரோட சேராத மரமும் இல்ல
நெஞ்சுக்குள் சேராத வார்த்த இல்ல
நெருப்புக்குள் எரியாத பொருளும் இல்ல
இரவுக்குத் துணை உண்டு விண்மீன்களே
எனக்கு என்று யாருண்டு சொல்லுங்களே
கண்ணுக்குத் துணை உண்டு இமை இரண்டும்
காட்டுக்கு யாருண்டு சொல்லுங்களே
உறவோட உறவாடும் சொந்தங்களே
பரிவோட என்னையும் பாருங்களே
கண்ணீரை பார்க்காதே கலைஞரே
கவியொன்று எனக்கொன்று தாருங்களே
பயிரோட சேராத கலையும் இல்ல
மலரோட சேராத வண்டு இல்ல
பஞ்சனை இல்லாத ஊடல் இல்ல
நெஞ்சனை இல்லாத உறவும் இல்ல
விண்ணோட சேராத மேகம் இல்ல
பொண்ணோட சேராத ஆணும் இல்ல
பொண்ணோட சேராத ஆணும் இல்ல
பொண்ணோட சேராத ஆணும் இல்ல

WRITERS

L.G.Ravichandhar

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other