LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Semparuthi Poo

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு
இது பருவத்தோட கூத்து
இது பருவத்தோட கூத்து

செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு
இது பருவத்தோட பாட்டு

செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு
இது பருவத்தோட கூத்து

தென்றலும் வந்ததடி
நல்ல சேதியும் சொன்னதடி
சந்திர சூரியனும் வந்து சம்மதம் என்றதடி

அந்த வானவில் தோரணத்த
வந்து வாசலில் கட்டுங்க கும்மிய தட்டுங்க

செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு
இது பருவத்தோட கூத்து

மாங்கல்ய லட்சுமி மமதரஸ்தா ஸ்ரீ ஜெய சேகரி
ஆரத்த வருணி கருணா கடாட்சி காமேஸ்வரி

ஆஆ...ஆஆ...ஆஆஆ

ஆவாரம் பூவ தொட்டு
அங்க இங்க பொண்ண தொட்டு
ஏதேதோ ஆனதடி எனக்குத்தான் ஹான்

ஆகாத நாளு இது
ஐயர் வந்து சொன்ன பின்னும்
கூடாது மச்சானுக்கு நெனப்புத்தான்

தொண்டைக்குழி வத்திப்போச்சு
தாகம்தான் தாகம்தான்
சாமக்கோழி கூவுதடி வா ஆஹா ஹான்

புத்தி கெட்ட மச்சானுக்கு
கோவம்தான் கோவம்தான்
புள்ள ஒன்னு பெத்து தரவா

அந்த சங்கதி பேசிடத்தான்
அள்ளி சந்தனம் பூசிடத்தான்
அடி கூவுற கோழிய கூடையில் அமுக்கி

செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு
இது பருவத்தோட கூத்து

ஆஆ...ஆஆஆ....ஆஆஆ

ஜனனி ஜன்ம சௌக்கியனா
பதனி குல சம்ஹதா
பதவி பூர்வ புண்ணியதா
லேக்கியவே ஜென்ம பத்ரிக்கா

அத்தானின் ஆசையில
அள்ளி வச்ச முத்தம் எல்லாம்
கை காலு மொளைச்சு வந்து சிரிக்குதே

தாத்தாவின் ஜாடையில
சுத்தி வரும் பேர புள்ள
தொட்டாலே வெள்ளை முடி கருக்குதே

திக்கி திக்கி பேசுறப்போ
தேன் அங்கே தெறிக்கிது
அச்சு வெல்லம் கூட கசக்கும்

தங்கமணி தொட்டிலிலே தூங்குற சூரியன்
ஏதேதோ எண்ணி சிரிக்கும்

சின்ன தங்கச்சி வேணுமுன்னு
பையன் சொன்னது கேட்கலையா
நம்ம கட்டில தொடைச்சு தொட்டில கட்டு

செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு
இது பருவத்தோட பாட்டு

செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு
இது பருவத்தோட கூத்து

தென்றலும் வந்ததடி
நல்ல சேதியும் சொன்னதடி
சந்திர சூரியனும் வந்து சம்மதம் என்றதடி

அந்த வானவில் தோரணத்த
வந்து வாசலில் கட்டுங்க கும்மிய தட்டுங்க

WRITERS

KALAI KUMAR, SIRPY SIRPY

PUBLISHERS

Lyrics © IPRS, Songtrust Ave

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist