என்னை நானே தொலைத்துவிட்டேன்
ஓர் மார்கழியின் முன் பனி இரவில்
என்னை நானே எரித்துவிட்டேன் யா
என்னை நானே தொலைத்துவிட்டேன்
ஓர் மார்கழியின் முன் பனி இரவில்
என்னை நானே எரித்துவிட்டேன்
என்னை நானே தொலைத்துவிட்டேன்(ஓஓ )
ஓர் மார்கழியின் முன் பனி இரவில்
என்னை நானே எரித்துவிட்டேன்
இதழின் ஓரம் இழைந்து ஓடும்
அவள் சிரிப்பில் விழுந்துவிட்டேன்
அதை பிடித்தே எழுந்துவிட்டேன்
கரைந்து போகும் காற்றில் ஆடும்
அவள் மூச்சில் கரைந்துவிட்டேன்
என் வாழ்வை வாழ்ந்துவிட்டேன்
என் ராத்திரியில் உன் சூரியனை
என் கனவுகளில் உன் நிலவுகளை
என் ராத்திரியில் உன் சூரியனை
என் கனவுகளில் உன் நிலவுகளை
எனது தோட்டம் உனது பூக்கள்
எனது காற்றில் உனது மூச்சை
எதற்க்காக அனுப்பிவைத்தாய்
பின்பு ஏன் நீ தூக்கிவிட்டாய்(ஓஓஓ ஓஓஓ )