LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Mukkona Chakkarathil

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
தைய்யத்த தைய்யத்த தத்தோம் தத்தோம்
தைய்யத்த தைய்யத்த தத்தோம் தத்தோம்
திடத்தோம் திடத்தோம் திடத்தோம் தோம்
தகிட தோம் தகிடதோம் தகிடதோம் தோம்
முக்கோணச் சக்கரத்தில் உட்காரும் தேவி
மூவருக்கும் மேல்யிருக்கும் முத்து மகமாயி
முக்கோணச் சக்கரத்தில் உட்காரும் தேவி
மூவருக்கும் மேல்யிருக்கும் முத்து மகமாயி
நட்ட விதை முளைக்கனும் தொட்டதெல்லாம் துலங்கனும்
பக்கதுணை இருக்கனும் சிவ சக்தி
நாங்க ஒற்றுமையா பொழைக்கணும் ஓம் சக்தி
முக்கோணச் சக்கரத்தில் உட்காரும் தேவி
மூவருக்கும் மேல்யிருக்கும் முத்து மகமாயி
தய்யக்க ஜித்தக்க தய்யக்க ஜித்தக்க
தய்யக்க சிவசிவ தகத்தா
காற்சிலம்பு ஓசையிட
கை வளையல் சத்தமிட
நாற்புறமும் மங்கையர்கள்
கும்மி அடிபோம் கும்மி அடிபோம்
காற்சிலம்பு ஓசையிட
கை வளையல் சத்தமிட
நாற்புறமும் மங்கையர்கள்
கும்மி அடிபோம் கும்மி அடிபோம்
எங்கள் நாயகியின் பேர் விளங்க
சிந்து படிப்போம் சிந்து படிப்போம்
கோவிலுக்கு வாசலிலே மாவிளக்கு ஏற்றி வைப்போம்
கோவிலுக்கு வாசலிலே மாவிளக்கு ஏற்றி வைப்போம்
காவலுக்கு நிற்பவளே கண்டுகளிப்போம் அவள்
காலடியில் பூச்சரங்கள் கொண்டு குவிப்போம்
பஞ்சமின்றி விளையனும்
பருவமழைய பொழியனும்
பஞ்சமின்றி வாழனும் சிவ சக்தி
எங்க வாழ்வு இன்னும் வளரனும் ஓம் சக்தி
முக்கோணச் சக்கரத்தில் உட்காரும் தேவி
மூவருக்கும் மேல்யிருக்கும் முத்து மகமாயி
தய்யக்க ஜித்தக்க தய்யக்க ஜித்தக்க தய்தய் தய்தய் தோம்
தய்யக்க ஜித்தக்க தய்யக்க ஜித்தக்க தய்தய் தய்தய் தோம்
தய்யக்க ஜித்தக்க தய்யக்க ஜித்தக்க தய்தய் தய்தய் தோம்
ஆனைமுகன் மூத்தபிள்ளை
ஆறுமுகன் அடுத்த பிள்ளை
ஊரிலுள்ள பிள்ளையெல்லாம்
உனது பிள்ளைதான் உனது பிள்ளைதான்
ஆனைமுகன் மூத்தபிள்ளை
ஆறுமுகன் அடுத்த பிள்ளை
ஊரிலுள்ள பிள்ளையெல்லாம்
உனது பிள்ளைதான் உனது பிள்ளைதான்
நாங்க வாழ்வேதெல்லாம் மாரியம்மா
உனது எல்லைதான் உனது எல்லைதான்
ஆயிரம் கண் உடையவளே ஆதிசக்தி உமையவளே
ஆயிரம் கண் உடையவளே ஆதிசக்தி உமையவளே
ஏழுலகும் நீ நடத்தும் ஆட்சி இருக்கும் அந்த
ஆட்சியிலே தர்மதேவன் காட்சி இருக்கும்
கொண்ட பகை தீர்ந்தது இரண்டு ஊர்சேர்ந்தது
ஒன்றுபட்டு இருக்கணும் சிவ சக்தி
எல்லாம் உன்னருளால் நடக்கணும் ஓம் சக்தி
முக்கோணச் சக்கரத்தில் உட்காரும் தேவி
மூவருக்கும் மேல்யிருக்கும் முத்து மகமாயி
ஏய் ஏய்
தய்யக்க ஜித்தக்க தய்யக்க ஜித்தக்க தய் தய்தய் தோம்
தய்யக்க ஜித்தக்க தய்யக்க ஜித்தக்க தய் தய்தய் தோம்
ஏய் ஏய்
தய்யக்க ஜித்தக்க தய்யக்க ஜித்தக்க தய் தய்தய் தோம்

WRITERS

Vaalee

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other