LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ongarame

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
விநாயகனே ஞாலத்தின் மூல முதலாவான்
விநாயகனே வேண்டுவதை ஈவான்
விநாயகனே எண்ணத்தில் வாக்கீல் செயலிலே முன் நிற்பான்
திண்ணமாய் அவன் தான் துணை

ஓம் காரமே அது கணநாதமே
ஓம் காரமே அது கணநாதமே
நாயகன் திரு நாமம் வினை தீர்க்குமே
ஓம் காரமே அது கணநாதமே
நாயகன் திரு நாமம் வினை தீர்க்குமே
விநாயகன் திரு நாமம் வினை தீர்க்குமே
ஓம் காரமே அது கணநாதமே

ஐங்கரத்தன் தருவான் அனுக்ரஹமே ஒரு
ஆபத்தில் காக்கும் அவன் அபயக் கரமே

ஐங்கரத்தன் தருவான் அனுக்ரஹமே ஒரு
ஆபத்தில் காக்கும் அவன் அபயக் கரமே
தும்பிக்கை ஏந்தும் மணி கலசமே இனி
இன்பங்கள் எல்லாமே நம் வசமே
தும்பிக்கை ஏந்தும் மணி கலசமே இனி
இன்பங்கள் எல்லாமே நம் வசமே

ஓம் காரமே அது கணநாதமே
நாயகன் திரு நாமம் வினை தீர்க்குமே
விநாயகன் திரு நாமம் வினை தீர்க்குமே
ஓம் காரமே அது கணநாதமே

வினைகளை இரு செவிகள் விசிறி விடும்
விழிகளின் அருட் பார்வை வெற்றி தரும்
வினைகளை இரு செவிகள் விசிறி விடும்
விழிகளின் அருட் பார்வை வெற்றி தரும்
பாவம் பொடி பொடியாய் பறந்து விடும்
பாதம் படி படியாய் ஏற்றி விடும்
பாவம் பொடி பொடியாய் பறந்து விடும்
அவன் பாதம் படி படியாய் ஏற்றி விடும்

ஓம் காரமே அது கணநாதமே
நாயகன் திரு நாமம் வினை தீர்க்குமே
ஓம் காரமே அது கணநாதமே
நாயகன் திரு நாமம் வினை தீர்க்குமே
விநாயகன் திரு நாமம் வினை தீர்க்குமே
ஓம் காரமே அது கணநாதமே

WRITERS

ULUNTHURPPETTAI SHANMUGAM

PUBLISHERS

Lyrics © IPRS, Royalty Network

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other