வந்தவன் எல்லாம் வாழ்ந்திடவில்லை
வாழ்ந்தவன் எல்லாம் ஓங்கிடவில்லை
ஓங்கியவன் எல்லாம் தாங்கிடவில்லை
தாங்குவது உலகை நீதி நேர்மையடா
தம்பி வந்தவன் எல்லாம் வாழ்ந்திடவில்லை
வாழ்ந்தவன் எல்லாம் ஓங்கிடவில்லை
வானிலே வெள்ளி உண்டு நிலவுண்டு உலகுக்காக
மண்ணிலே பொன் உண்டு பூன் உண்டு நமக்காக
கண்ணிலே கருணை உண்டு கடுஊரம் உண்டு நீதிக்காக
நண்டு சாக நண்டுகள் பிறந்தது ஞாலம் உய்வதற்க்காக
தம்பி வந்தவன் எல்லாம் வாழ்ந்திடவில்லை
வாழ்ந்தவன் எல்லாம் ஓங்கிடவில்லை
தேடினான் ஒருவன் செல்வங்கள் தன்னை காப்பாற்ற
வாடினான் வதங்கினான் ஒருவன் தன்னை ஞானியாக்க
கண்டாயா தம்பி கடவுள் காட்டிய உண்மை
தகனமானான் ஒருவன் மற்றவன் புத்தன்
பிச்சை எடுப்பவன் நான் பிச்சை கொடுப்பவன் நீ
பிச்சை எடுப்பவன் நான் பிச்சை கொடுப்பவன் நீ
ஆசைக்கு அடிமை நான் அதை அடக்குபவன் நீ
நேசா உன்னை புரிந்தவன் என்றும் அழிவதில்லை
ஈசா உன்னை மறுத்தவன் என்றும் வாழ்ந்தும் வாழ்வதில்லை
தம்பி வந்தவன் எல்லாம் வாழ்ந்திடவில்லை
வாழ்ந்தவன் எல்லாம் ஓங்கிடவில்லை
ஓங்கியவன் எல்லாம் தாங்கிடவில்லை
தாங்குவது உலகை நீதி நேர்மையடா
வந்தவன் எல்லாம் வாழ்ந்திடவில்லை
வாழ்ந்தவன் எல்லாம் ஓங்கிடவில்லை