LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Jannal Kaatre

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஜன்னல் காற்றே மின்னல் கீற்றே
நினைவோடு பேசும் மேத்தாவின் கவியே
கனவோடு வாட்டி வதைக்கின்ற சகியே
உன் வானவில் வேகம் நான் ஆளுகிற தேசம்
உன் பூக்களின் வாசம் என் பூமியில் வீசும்
உயிரில் உரசி உணர்வில் கலந்துவிட்டாய்
எல்லாம் நீ என எங்கும் நிறைந்துவிட்டாய்
ஜன்னல் காற்றே மின்னல் கீற்றே
நடக்கிடின்ற நதியே தழுவிடு எனையே
உயிருக்குள் வந்து உறைந்திடும் பனியே
இமைகள் திறந்து சாமரம் வீசுகிறாய்
இதயம் திறந்தும் மௌனம் பேசுகிறாய்
மேகம் மூடும் நிலவாய் மறைகின்றாய்
இருந்தும் என்னுள் ஒளியாய் நிறைகின்றாய்
தேவதை தேடியே வந்ததே
வாழ்த்தியே தேன்மலையில் தந்ததே
ஜன்னல் காற்றே மின்னல் கீற்றே
ஒருமுறை என்னை திருடிவிட்டாயே
மறுமுறை வந்து வருடிவிட்டாயே
உன்னை தேடி தென்றல் வருகிறது
என்னை ஏனோ சூடிக்கொள்கிறது
உன்னைப் பார்க்க மழையும் வருகிறது
பூக்கள் சேர்ந்தே குடையும் பிடிக்கிறது
வாழ்வினில் வந்ததே ஓர் வரம்
வந்திடக் காதலே காரணம்
ஜன்னல் காற்றே மின்னல் கீற்றே
நினைவோடு பேசும் மேத்தாவின் கவியே
கனவோடு வாட்டி வதைக்கின்ற சகியே
உன் வானவில் வேகம் நான் ஆளுகிற தேசம்
உன் பூக்களின் வாசம் என் பூமியில் வீசும்
உயிரில் உரசி உணர்வில் கலந்துவிட்டாய்
எல்லாம் நீ என எங்கும் நிறைந்துவிட்டாய்
ம்...ம்...ம்... ம்...ம்...ம்...

WRITERS

UDHAYAN, JEYA MURUGESAN

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other