ஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ
கோடியாம் பொருள் தரும் ஜாலங்களே
தேடியே உணர்ந்தே வாழ்ந்திடவே
நாடிடும் இன்பங்கள் ஓடி வரும்
கோடியாம் பொருள் தரும் ஜாலங்களே
தேடியே உணர்ந்தே வாழ்ந்திடவே
நாடிடும் இன்பங்கள் ஓடி வரும்
கோடியாம் பொருள் தரும் ஜாலங்களே
மண்ணையும் வெண்ணையும் நீ உண்டாய்
இரண்டுமே ஒன்றாய் நீ கண்டாய்
மண்ணையும் வெண்ணையும் நீ உண்டாய்
இரண்டுமே ஒன்றாய் நீ கண்டாய்
மலைதனைக் குடையாய் நீ பிடித்தாய்
கோகுலம் தன்னையே வாழ வைத்தாய்
கோடியாம் பொருள் தரும் ஜாலங்களே
கோபியர் மனதினில் இடம் பிடித்தாய்
குழலினில் இனிமைகள் நீ படைத்தாய்
கோபியர் மனதினில் இடம் பிடித்தாய்
குழலினில் இனிமைகள் நீ படைத்தாய்
ராதையின் காதலில் மயங்கி நின்றாய்
ராட்சதன் கம்சனை உயிர் குடித்தாய்
கோடியாம் பொருள் தரும் ஜாலங்களே
கார்முகில் வண்ணனாய் நிறமெடுத்தாய்
கானக மயிலினில் சிறகணிந்தாய்
கார்முகில் வண்ணனாய் நிறமெடுத்தாய்
கானக மயிலினில் சிறகணிந்தாய்
சலங்கைகள் குலுங்க நடை நடந்தாய்
சகலமும் நீயாய் ஆகி நின்றாய்
கோடியாம் பொருள் தரும் ஜாலங்களே
தேடியே உணர்ந்தே வாழ்ந்திடவே
நாடிடும் இன்பங்கள் ஓடி வரும்
கோடியாம் பொருள் தரும் ஜாலங்களே
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED