பனியின் வெண்மையிலும் தூய்மையானவள்
இருளை அகற்றிடும் மதியானவள்
பனியின் வெண்மையிலும் தூய்மையானவள்
இருளை அகற்றிடும் மதியானவள்
பாவத்தின் தலையை பாதத்தால் மிதித்தே
எந்நாளும் தேவன் அன்பில் மங்காத மரியாள்
எந்நாளும் தேவன் அன்பில் மங்காத மரியாள்
பனியின் வெண்மையிலும் தூய்மையானவள்
இருளை அகற்றிடும் மதியானவள்
தடாக நீரின்மேல் தவழும் கொடிபோல்
இறைவனின் தூய அருள் நிறைந்தவளே
வானவர் வாழ்த்தத் தூயவர் போற்றப்
தடாக நீரின்மேல் தவழும் கொடிபோல்
இறைவனின் தூய அருள் நிறைந்தவளே
வானவர் வாழ்த்தத் தூயவர் போற்றப்
துன்ப உலகினில் வாழ்வோரைத் தேற்றப்
பரிவுடன் பரிந்துரை செய்பவளே
துன்ப உலகினில் வாழ்வோரைத் தேற்றப்
பரிவுடன் பரிந்துரை செய்பவளே
பனியின் வெண்மையிலும் தூய்மையானவள்
இருளை அகற்றிடும் மதியானவள்
வானக வேந்தனின் வழியில் நடந்தே
வரங்களின் ஊற்றாய் இருப்பவளே
மகனில் இணைந்து மாண்பினில் நுழைந்து
விண்ணக அரசியாய் திகழ்பவளே
வானக வேந்தனின் வழியில் நடந்தே
வரங்களின் ஊற்றாய் இருப்பவளே
மகனில் இணைந்து மாண்பினில் நுழைந்து
விண்ணக அரசியாய் திகழ்பவளே
இன்ப வாழ்வினை அன்போடு அளித்துத்
தனிஉடன் மகிழ்வினை அருள்பவளே
இன்ப வாழ்வினை அன்போடு அளித்துத்
தனிஉடன் மகிழ்வினை அருள்பவளே
பனியின் வெண்மையிலும் தூய்மையானவள்
இருளை அகற்றிடும் மதியானவள்
பாவத்தின் தலையை பாதத்தால் மிதித்தே
எந்நாளும் தேவன் அன்பில் மங்காத மரியாள்
எந்நாளும் தேவன் அன்பில் மங்காத மரியாள்
பனியின் வெண்மையிலும் தூய்மையானவள்
இருளை அகற்றிடும் மதியானவள்