LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kottukali Kovakari

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
அம்மா அ அ அ அம்மா
அம்மா அ அ அ அம்மா
அம்மா அம்மா அம்மா அ அ

கொட்டுக்காளி கோவக்காரி
சமயபுர மண்ணுக்காரி
உன்ன தேடி நானும் வாரேன்
பொன்னி நதி சொந்தக்காரி
கொட்டுக்காளி கோவக்காரி
சமயபுர மண்ணுக்காரி
உன்ன தேடி நானும் வாரேன்
பொன்னி நதி சொந்தக்காரி
மஞ்ச சேலை மாவிளக்கு
கொண்டுக்கிட்டு நானு வாரேன்
திருவடியில் எறும்பாக
தினம் ஊற நானும் வாரேன்
மஞ்ச சேலை மாவிளக்கு
கொண்டுக்கிட்டு நானு வாரேன்
திருவடியில் எறும்பாக
தினம் ஊற நானும் வாரேன்
கொட்டுக்காளி கோவக்காரி தாயே
கொட்டுக்காளி கோவக்காரி
சமயபுர மண்ணுக்காரி
உன்ன தேடி நானும் வாரேன்
பொன்னி நதி சொந்தக்காரி
கொட்டுக்காளி கோவக்காரி
சமயபுர மண்ணுக்காரி
உன்ன தேடி நானும் வாரேன்
பொன்னி நதி சொந்தக்காரி

சமயபுர மாரியம்மா
உனக்கு சமயம் உண்டோ கூறுமம்மா
சமயபுர மாரியம்மா
உனக்கு சமயம் உண்டோ கூறுமம்மா

மஞ்சள் தொட்டு நெற்றி வைக்க
இடியும் மின்னலும் அடிக்குதடி
மண் எடுத்து கும்பிடத்தான்
புயலும் மழையும் பொழியுதடி
அம்மா மஞ்சள் தொட்டு நெற்றி வைக்க
இடியும் மின்னலும் அடிக்குதடி
மண் எடுத்து கும்பிடத்தான்
புயலும் மழையும் பொழியுதடி
உன் மேனி பட்ட வேம்பெடுத்து
வேண்டிக்கிட்டேன் நானும் அம்மா
வேதனைகள் விலகி நின்னு
வேடிக்கை தான் பாக்குது அம்மா
உன் மேனி பட்ட வேம்பெடுத்து
வேண்டிக்கிட்டேன் நானும் அம்மா
வேதனைகள் விலகி நின்னு
வேடிக்கை தான் பாக்குது அம்மா

மாரியம்மா மாரியம்மா
உனை மறவேனோ நானும் அம்மா
மாரியம்மா மாரியம்மா
உனை மறவேனோ நானும் அம்மா

கொட்டுக்காளி கோவக்காரி
சமயபுர மண்ணுக்காரி
உன்ன தேடி நானும் வாரேன்
பொன்னி நதி சொந்தக்காரி
கொட்டுக்காளி கோவக்காரி
சமயபுர மண்ணுக்காரி
உன்ன தேடி நானும் வாரேன்
பொன்னி நதி சொந்தக்காரி

உள்ளங்கையில் சூடம் ஏத்தி
ஆடி வந்தேன் வேண்டிக்கிட்டு
உச்சி முதல் பாதம் வரை
சிலிர்க்குதடி உன் வனப்பு
உள்ளங்கையில் சூடம் ஏத்தி
ஆடி வந்தேன் வேண்டிக்கிட்டு
உச்சி முதல் பாதம் வரை
சிலிர்க்குதடி உன் வனப்பு
உன் பாதம் பட்ட மண் எடுத்து
நெத்தி வைச்சேன் நானும் அம்மா
மத்தகத்து யானை போல
சக்தி ஒன்று சேருது அம்மா
உன் பாதம் பட்ட மண் எடுத்து
நெத்தி வைச்சேன் நானும் அம்மா
மத்தகத்து யானை போல
சக்தி ஒன்று சேருது அம்மா

மாரியம்மா மாரியம்மா
உனை மறவேனோ நானும் அம்மா
மாரியம்மா மாரியம்மா
உனை மறவேனோ நானும் அம்மா

கொட்டுக்காளி கோவக்காரி
சமயபுர மண்ணுக்காரி
உன்ன தேடி நானும் வாரேன்
பொன்னி நதி சொந்தக்காரி
கொட்டுக்காளி கோவக்காரி
சமயபுர மண்ணுக்காரி
உன்ன தேடி நானும் வாரேன்
பொன்னி நதி சொந்தக்காரி
மஞ்ச சேலை மாவிளக்கு
கொண்டுக்கிட்டு நானு வாரேன்
திருவடியில் எறும்பாக
தினம் ஊற நானும் வாரேன்
மஞ்ச சேலை மாவிளக்கு
கொண்டுக்கிட்டு நானு வாரேன்
திருவடியில் எறும்பாக
தினம் ஊற நானும் வாரேன்
கொட்டுக்காளி கோவக்காரி வாமா
கொட்டுக்காளி கோவக்காரி
சமயபுர மண்ணுக்காரி
உன்ன தேடி நானும் வாரேன்
பொன்னி நதி சொந்தக்காரி
கொட்டுக்காளி கோவக்காரி
சமயபுர மண்ணுக்காரி
உன்ன தேடி நானும் வாரேன்
பொன்னி நதி சொந்தக்காரி
சமயபுர மாரியம்மா
உனக்கு சமயம் உண்டோ கூறுமம்மா
சமயபுர மாரியம்மா
உனக்கு சமயம் உண்டோ கூறுமம்மா
சமயபுர மாரியம்மா
உனக்கு சமயம் உண்டோ கூறுமம்மா
சமயபுர மாரியம்மா
உனக்கு சமயம் உண்டோ கூறுமம்மா

WRITERS

Tajmeel Sherif

PUBLISHERS

Lyrics © IPRS, Royalty Network

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup Icon
Theme

None