சுற்றுகிற பூமி உள்ளவரை நாமும்
கொட்டுகிற வானம் வற்றுகிற போதும்
கால்கள் போகவே வந்திடும் ஓர் வழி
காலம் மாறவே செய்திடுவோம் பணி
பூங்காற்றாய் வீச வேலி ஏதும் இல்லையே ஹேஹேய்
யாரென்கிற போதும் நாம் அன்பினை காட்ட
ஓய்வின்றி எந்நாளும் நாம் சிந்திடும் வேர்வை
மறையட்டும் சோகம் என்று நாம் துணிந்தாலே
திசையெட்டும் ஓடி வந்து கைகள் தட்டுமே
நிகழட்டும் மாற்றம் என்று நாம் உயர்ந்தாலே
உலகத்தின் செய்தி நம்மை சேகரிக்குமே
கடல் ஓர் நாளும் காயாது ஓயாது தோழா
உயிர் போனாலும் போகாமல் போராடு தோழா
சுற்றுகிற பூமி உள்ளவரை நாமும்
கொட்டுகிற வானம் வற்றுகிற போதும்
நேரங்களைப் பார்த்து நாம் செய்கிற வேலை
சேதகங்களைப் பார்த்து நாம் நின்றிடும் போது
எரியட்டும் தீமை என்று தீயை வைத்தாலே
வருகின்ற காலம் நம்மை வாரிக் கொள்ளுமே
ஒழியட்டும் பேதம் என்று போர் புரிந்தாலே
புயல்கள் போல நம்மை பூமி அள்ளுமே
நிலை மாறாமல் சோராமல் கை சேர்ந்து போனால்
குடை சாயாத வானாக நாள்தோறும் வாழ்ந்தால்
சுற்றுகிற பூமி உள்ளவரை நாமும்
கொட்டுகிற வானம் வற்றுகிற போதும்
கால்கள் போகவே வந்திடும் ஓர் வழி
காலம் மாறவே செய்திடுவோம் பணி
பூங்காற்றாய் வீச வேலி ஏதும் இல்லையே ஹேஹேஹேஹேய்
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED