காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேக்குறேன்
கண்கள் அழகா கன்னங்கள் அழகா
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்
என் காதல் கல்வெட்டில் நம் பேர் செதுக்குவேன்
என் நெஞ்சில் வெல்வெட்டில் உன்னை பதுக்குவேன்
அந்த வெண்ணிலாவிலே உந்தன் படத்தையே
காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேக்குறேன்
லட்சம் பூக்கள் ஒட்டிவைத்த சிற்பம்
பக்கம் வந்தும் கண்ணில் என்ன வெட்கம்
என்னை தீண்டாயோ நீ என்னை தீண்டாயோ
ஊசி மல்லி பார்வை என்னை கிள்ளும்
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று அள்ளும்
மின்னல் தோன்றாதோ வண்ண மின்னல் தோன்றாதோ
கையோடு கை கோர்த்தால் அச்சம் தான் விலகாதோ
ஓயாமல் நீ பார்த்தால் மச்சம் தான் நகராதோ
உன் கண்ணின் மீன்களை பார்த்து விட்டதால்
ம்ம்ம் காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேக்குறேன்
ஆ ஆ கண்கள் அழகா கன்னங்கள் அழகா
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்
என்னை உன்னில் அடகு வைக்க வருவேன்
சின்ன சின்ன முத்தம் வட்டி தருவேன்
இச்சு இச்சு சத்தம் என்னை தானே
கிச்சு கிச்சு மூட்ட சொக்கி போவேன்
உன்னாடை நானாக கெஞ்சி தான் கேப்பேனே
உதடாலே மறுத்தாலும் உள்ளூர ரசிப்பேனே
அட காதல் பாடம் தான் முடிந்து போனதே
எ எ காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேக்குறேன்
கண்கள் அழகா கன்னங்கள் அழகா
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்
என் காதல் கல்வெட்டில் நம் பேர் செதுக்குவேன்
என் நெஞ்சில் வெல்வெட்டில் உன்னை பதுக்குவேன்
அந்த வெண்ணிலாவிலே உந்தன் படத்தையே