LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kaadhal Parisu

•

1987

Kadhal Maharani Kavidhai

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆஆ ஆஆ ஆஆ

காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்
புதுக் கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தாள்

முத்துப் போல் சிரித்தாள்
மொட்டுப் போல் மலர்ந்தாள்
விழியால் இவள் கணை தொடுத்தாள்

இந்தக் காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்
புதுக் கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தாள்

பூவை நீ பூ மடல்
பூ உடல் தேன் கடல்
தேன் கடலில் தினமே குளித்தால் மகிழ்வேன்

மான் விழி ஏங்குது
மையலும் ஏறுது
பூங்கொடியை பனி போல் மெதுவாய் தழுவு

கண்ணே உந்தன் கூந்தல் ஓரம்
கண்கள் மூடித் தூங்கும் நேரம்

இன்பம் கோடி ஊஞ்சல் ஆடும்
உள்ளம் போகும் ஊர்வலம்

காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்

ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பஞ்சணை கூடத்தில் பால் நிலா காயுதே
நான் எனையே மறந்தேன் கனவில் மிதந்தேன்

உன் முக தீபத்தில் ஓவியம் மின்னுதே
உன் அழகால் இரவைப் பகலாய் அறிந்தேன்

மண்ணில் உள்ள இன்பம் யாவும்
இங்கே இன்று நாமும் காண்போம்

அன்பே அந்த தேவலோக
சொர்க்கம் இங்கே தேடுவோம்

காதல் யுவராஜா கவிதை பூ விரித்தான்
புதுக் கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தான்

முத்துப் போல் எடுத்தான்
தொட்டுத்தான் அணைத்தான்
விழியால் இவன் கணை தொடுத்தான்

இந்தக் காதல் யுவராஜா கவிதை பூ விரித்தான்
புதுக் கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தான்

WRITERS

Muthulingam, Ilaiyaraaja

PUBLISHERS

Lyrics © IPRS, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Kaadhal Parisu

1987

01

Hey Unnaithaane

Ilaiyaraaja, S. Janaki, S. P. Balasubrahmanyam

02

Kaanalukkul Meen Pidithen

Ilaiyaraaja, P. Susheela

03

Kadhal Maharani Kavidhai

Ilaiyaraaja, S. Janaki, S. P. Balasubrahmanyam

04

Koo Koo Endru Kuyil

Ilaiyaraaja, S. Janaki, S. P. Balasubrahmanyam

05

Jaadhi Illai

Ilaiyaraaja, Malaysia Vasudevan

From This Artist