கடவுளும் காதலும் வேறு இல்லை
இதுவரை பார்த்தவர் யாருமில்லை
முதன் முதல் இரண்டையும் பார்த்தவன்
காமமும் காதலும் வேறு இல்லை
எவருக்கும் இதுவரை தெரியவில்லை
புரிந்தவள் நான்தானே ஏ ஏ ஏ (ஓஹோ)
கடவுளும் காதலும் வேறு இல்லை
இதுவரை பார்த்தவர் யாருமில்லை
முதன் முதல் இரண்டையும் பார்த்தவன்
நீ சிந்திய மௌனத்தை சேர்த்துதான்
இசைக்கிறேன் நான் ஒரு இன்னிசை
மீசையும் வன்முறை ரசித்துத்தான்
நான் கூட கற்கிறேன் தன்னிசை
உன் மென்மையை விரும்புது என் மனம்
போர்களம் புகுந்திட வேண்டாம்
உன் வன்மையை விரும்புது பெண்மை தான்
அகிம்சையாய் மாறிட வேண்டாம் (ஓஓஹூஹோஓஓ)
இதுவரை எனை நான் பார்த்ததில்லை
உனைக்கண்ட இரவில் கரைந்ததில் இருந்து
உன் உடலிலும் வர்ணங்கள் தெரியுதே
இது என்ன அதிசயம் சொல்லிடு
இரவெல்லாம் பகலாய் தோன்றுதே
இது என்ன ரகசியம் சொல்லிடு
நீ புண்ணகை சிந்திடும் நொடிகளில்
நான் சிதறி போகிறேன் அள்ளிடு
உன் நுனி விரல் தீண்டிடும் நொடிகளில்
பொசெக்கன்று வளர்கிறேன் கிள்ளிடு (ஓஓஹோஓஓ)
அதில் கொஞ்சம் இம்சைகள் வை வை
அதுதான் காதலில் மெய் மெய்
கடவுளும் காதலும் வேறு இல்லை
இதுவரை பார்த்தவர் யாருமில்லை
பார்த்தவன் நான் தானே ஏய் ஏய் ஏய்