வேண்டுகின்ற வரமளிக்கும் அன்னை என்றே
வித்தகரும் பக்தர்களும் போற்றுகின்றார்
நீண்டதொரு புகழ்கொண்ட மூகாம்பிகே நின் பதமே
அருள்வாய் அம்மா வரம் அருள்வாய் அம்மா
அகிலமெல்லாம் போற்றும் அன்னை மூகாம்பிகையே
அருள்வாய் அம்மா வரம் அருள்வாய் அம்மா
அகிலமெல்லாம் போற்றும் அன்னை மூகாம்பிகையே
அருள்வாய் அம்மா வரம் அருள்வாய் அம்மா
பொருளோடு புகழ் சேர புண்ணிய குணங்கள் மாற
அருள் தந்து என்னைக் காக்க அன்னை உன் புகழ்பாட
பொருளோடு புகழ் சேர புண்ணிய குணங்கள் மாற
அருள் தந்து என்னைக் காக்க அன்னை உன் புகழ்பாட
அருள்வாய் அம்மா வரம் அருள்வாய் அம்மா
அகிலமெல்லாம் போற்றும் அன்னை மூகாம்பிகையே
அருள்வாய் அம்மா வரம் அருள்வாய் அம்மா
உலகினைக் காக்கும் உந்தன் திருவடி நாடி
வருகின்ற பக்தர்களோ தினப்பல கோடி
உலகினைக் காக்கும் உந்தன் திருவடி நாடி
வருகின்ற பக்தர்களோ தினப்பல கோடி
கலைவல்லார் உனைப் புகழ்ந்து இசையுடன் பாடி
இசை கலைவல்லார் உனைப் புகழ்ந்து இசையுடன் பாடி
கரங்குவிப்பார் மனதில் கனிவுடன் வாழ்பவளே
அருள்வாய் அம்மா வரம் அருள்வாய் அம்மா
அகிலமெல்லாம் போற்றும் அன்னை மூகாம்பிகையே
அருள்வாய் அம்மா வரம் அருள்வாய் அம்மா
சீரிய தியானம் ஒன்றே பக்தியை வளர்க்கும்
சிந்தையிலே தெளிந்த ஞானத்தைக் கொடுக்கும்
சீரிய தியானம் ஒன்றே பக்தியை வளர்க்கும்
சிந்தையிலே தெளிந்த ஞானத்தைக் கொடுக்கும்
நேரில் உன் திருமுன்னே உறுதியாய் நினைக்கும்
நேரில் உன் திருமுன்னே உறுதியாய் நினைக்கும்
நல்லவர் வேண்டுகின்ற நலமளிக்கும் தாயே
அருள்வாய் அம்மா வரம் அருள்வாய் அம்மா
அகிலமெல்லாம் போற்றும் அன்னை மூகாம்பிகையே
அருள்வாய் அம்மா வரம் அருள்வாய் அம்மா